Youtube யின் விளம்பரத்தை நம்பி ரூ,76.5 லட்சத்தை இழந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பல டிஜிட்டல் scam, பிராடு என பல நடந்து வருகிறது, மேலும் அதை போல் இந்த ஆன்லைனில் முதலிடு செய்தால் அதிக பணத்தை பெற முடியும் என உருதி அளிக்கிறார்கள் ஆனால் அதில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை அதே போல தமிழ் நாட்டில் அரசு மருத்துவர் ஒருவர் Youtube விளம்பரத்தில் பார்த்து க்ளிக் செய்ததன் மூலம் ரூ, 76.5 லட்சம ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் மூலம் பணத்தை இழந்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியரான டாக்டர், யூடியூப்பில் பிரவுசிங் செய்து கொண்டிருந்தபோது ட்ரேடிங் டிப்ஸ் வழங்கும் விளம்பரத்தை கவனித்தார் மேலும் அது அவரை ஈர்க்க செய்தது அதனால் அதை க்ளிக் செய்தார் அதன் பின் அது ஒரு WhatsApp க்ரூப் பக்கத்தில் அழைத்து சென்றது, அந்த பக்கத்தில் முலிடு செய்தவர்கள் ஸ்டாக் டிப்ஸ் மற்றும் ஸ்க்ரீன்ஷாட் போன்றவற்றை அதில் பகிரப்பட்டிருந்தது, அதை நம்பி மறுத்து இவை அனைத்து உண்மை என மருத்துவர் நம்ப ஆரம்பித்தார் அதன் பிறகு “திவாகர் சிங்” என்ற பெயரைப் பயன்படுத்தி ஒருவர் பேச்ச ஆரம்பித்தார் மேலும் அந்த சேட்டில் அவர் ஒரு சிறிய இன்வேஸ்ட்மென்ட் மூலம் அதிக பணம் கிடைக்கும் என நமபவைத்தர்.
அவரது நம்பிக்கையைப் பெற, க்ரூப் மெம்பர் முதலில் அவருக்கு அடிப்படை வர்த்தகக் கருத்துக்களைக் கற்றுக் கொடுத்தனர் மற்றும் அதிக வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்ய அவரை ஊக்குவித்தனர். ஆன்லைன் பிஸ்னஸ் தளத்தில் அக்கவுன்ட் திறக்கும்படி அவர்கள் அவரை வற்புறுத்தினார்கள், முதலீடுகளில் 30 சதவீத லாப விகிதத்துடன் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்தனர். அவர்களின் சுருதியால் நம்பி, மருத்துவர் பெரிய தொகையை அக்கவுண்டில் மாற்றத் தொடங்கினார், அவருடைய பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருடைய லாபம் பெருகும் என்றும் நம்பினார்.
அக்டோபர் மூன்றாவது வாரத்தில் ஸ்கேம்மர் வழங்கிய லிங்கின் மூலம் ரூ,76.5 லட்சம் டெபாசிட் செய்திருந்தார், அதன் பிறகு அக்டோபர் 22 மிக பெரிய அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது, அதில் 50 லட்ச ரூபாய் பணம் எடுக்க முயலும்போது மீண்டும் இந்த செயல்முறையை தொடர் 50 லட்சம் ப்ரோசெசிங் பணம் தேவைப்படும் எனக் கூறப்பட்டிருந்தது அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், போலீசில் புகார் செய்தார்.
இது போன்ற இன்வெஸ்ட்மென்ட் மோசடியில் எப்படி தப்பிப்பது ;
- தேவை இல்லாத விளம்பரங்களை தவிர்க்கவும்:குயிக் இன்வெஸ்ட்மென்ட் வருமானத்தை வழங்கும் விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சோசியல் மீடியா மற்றும் வீடியோ விளம்பரங்களை பாதிக்கப்பட்டவர்களை ஈர்க்க பயன்படுத்துகின்றனர்.
- முதலிடு செய்யுமுன் அதைப்பற்றி ரிசர்ச் செய்யவும்: நீங்கள் வர்த்தகத்தில் ஆர்வமாக இருந்தால், சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களைக் கலந்தாலோசித்து முதலீடு செய்வதற்கு முன் தளங்களின் அதிகாரபூர்வ தன்மையை சரிபார்க்கவும்.
- அதிக ரிட்டர்ன் யில் எச்சரிக்கை :மிக அதிக வருமானம் தரும் வாக்குறுதிகள் பெரும்பாலும் மோசடிக்கான சிவப்புக் கொடிகளாகும்
- சரிபார்க்கப்பட்ட க்ரூபில் மட்டும் சேரவும்: WhatsApp அல்லது Telegram யில் சரிபார்க்கப்படாத பைனான்சியல் க்ரூப்பில் சேர்வதைத் தவிர்க்கவும்.
இதையும் படிங்க:Instagram யில் இந்த செட்டிங் உடனே செய்துவிடுங்க இல்லயெனில் மொத்த டேட்டாவும் லீக்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile