Google Drive யிலிருந்து தானாகவே காணமல் போகும் டேட்டா

Updated on 29-Nov-2023

நீங்களும் Google அக்கவுன்ட் வைத்திருப்பவராக இருந்து, Google டிரைவ் யில் இருக்கும் உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பேக்கப் எடுத்தால் , எச்சரிக்கையாக இருங்கள். கூகுள் டிரைவில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், பயனர்களின் டேட்டா தானாகவே டெலிட் ஆகிறது என்று. பல பயனர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது ஏதோ பிழை காரணமாக நடப்பதாக கூகுள் நிறுவனமும் ஒப்புக் கொண்டு, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சில பயனாளர்களின் டிரைவ் டேட்டா டெலிட் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சிக்கல் பெரும்பாலும் Google Driveவின் டெஸ்க்டாப் பயனர்களிடம் ஏற்படுகிறது. இது டெஸ்க்டாப் app வெர்சன் 84.0.0.0 through 84.0.4.0.விரைவில் புதிய அப்டேட் வெளியாகும் என கூகுள் தெரிவித்துள்ளது.

Google Drive யின் இந்த பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி?

முதலில் செய்ய வேண்டியது, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் Google டிரைவ் டேட்டாவை பேக்கப் எடுக்க வேண்டும். சில காரணங்களால் டிரைவிலிருந்து டேட்டா நீக்கப்பட்டாலும், உங்கள் டேட்டா உங்கள் கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த சிக்கல் ஆன்லைனில் எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டது?

இந்த மர்மமான காணாமல் போன செய்தியை முதன்முதலில் தி ரெஜிஸ்டரால் தெரிவிக்கப்பட்டது, ஒரு பயனர் தனது கூகுள் டிரைவில் திறக்கும்போது கண்டறியப்பட்டது மே 2023 யில் இருந்ததைக் கண்டறிந்தார், அதாவது அதன் பின்னர் அனைத்து பதிவேற்றங்களும் மறைந்துவிட்டன. பலமுறை முயற்சித்தும், பயனர் எந்த டேட்டாவையும் ரெகவர் செய்ய முடியவில்லை.

“Google சப்போர்ட் குழு என்னிடம் (South Korea team) கேட்ட ரெகவர் செயல்முறையை நான் பின்பற்றினேன். அவர்கள் ஒரு ரெகவர் திட்டத்தை வைத்து தோல்வியடைந்தனர். பிறகு என்னை பேக்கப் DriveFS போல்டரை ரீஸ்டோர் எடுக்க சொல்லும் ஆனாலும் எதுவும் மாறவில்லை. அநேகமாக மாநிலங்களில் இருக்கும் கூகுள் சப்போர்ட் குழுவிடம் நான் சிக்கலைப் புகாரளித்தேன், மேலும் அவர்கள் தங்கள் இஞ்சினியரிடம் சிக்கலைப் புகாரளிக்கச் சொன்னார்கள். ஆனால் இஞ்சிநியரிடமிருந்து எந்த பதிலும் இல்லை, மேலும் அவர்கள் எனது சிக்கலை மதிப்பாய்வு செய்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை,” என்று பயனர் கூகுள் டிரைவ் சோசியல் கம்யுநிடியில் பதிவிட்டார்.

இதையும் படிங்க :Jio, Airtel, Vi மற்றும் BSNL யின் ரூ,199 கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்?

அதனை தொடர்ந்து பல பேர் இதே போன்ற சிக்கல் இருப்பதாக தெரிவித்தார், எனக்கும் அதேதான் நடந்தது. காணாமல் போன பைல்கள்> 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததால் நான் இப்போது பேரழிவிற்கு உள்ளாகிவிட்டேன். எங்கள் தகவல் தொழில்நுட்பக் குழு Google சப்போர்ட் தொடர்பு கொள்ள முயற்சித்தது, ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :