SIM Swap Scam: ரூ,50 லட்சத்தை இழந்த வழக்கறிஞர் இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

SIM Swap Scam: ரூ,50 லட்சத்தை இழந்த வழக்கறிஞர் இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
HIGHLIGHTS

தனது பேங்க் அக்கவுண்டிலிருந்து 50 லட்சம் பணம் காணமல் போனதாக கூறியுள்ளார்

அந்த நபரின் நம்பருக்கு தெரியாத நம்பரிலிருந்து இருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்துள்ளன.

இது சிம் ஸ்வெப்பிங்காக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

SIM Swap Scam ;சமிபத்திய மிக பெரிய மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது, இங்கு ஃபோன் ஹேக்கிங் மோசடியால் பாதிக்கப்பட்டவர் வடக்கு டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தெரியாத நம்பரிலிருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்ததாகவும் அதன் பிறகு தனது பேங்க் அக்கவுண்டிலிருந்து 50 லட்சம் பணம் காணமல் போனதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில், வழக்கறிஞரோ காலை எடுக்கவில்லை அல்லது யாரிடமும் எந்த OTP போன்ற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், அந்த நபரின் நம்பருக்கு தெரியாத நம்பரிலிருந்து இருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்துள்ளன. இதன்பிறகு, அவரது அக்கவுண்டில் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது. இது சிம் ஸ்வெப்பிங்காக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின்படி, ஒரு வழக்கறிஞர் ஒரு சிறப்பு போன் நம்பரிலிருந்து மூன்று மிஸ்ட் கால்களை பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஒரு நம்பரிலிருந்து அழைத்தபோது அது கொரியர் டெலிவரி கால் அப்போது வக்கீல் அவரது வீட்டு முகவரியை கொடுத்தார். டெலிவரி பாய் தனது நண்பர் தனக்கு ஒரு பாக்கெட் அனுப்பியதாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கும் ஒரு பொட்டலம் வழங்கப்பட்டது. ஆனால் பேங்க் பணம் எடுப்பதாக இரண்டு மெசேஜ்கள் வந்திருந்த அவரது போனை அவர் கவனிக்கவில்லை. எனவும் கூறினார்.

வழக்கு விசாரணை மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞரிடம் அக்டோபர் 18ஆம் தேதி இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது,, பொலிஸாரின் கூற்றுப்படி, விசாரணையில் அவரது பிரவுசரில் சில ப்ரவுசர் ஹிஸ்டரி இருப்பதைக் கண்டறிந்தனர், இது மிகவும் அசாதாரணமானது. அந்த நபருக்குத் தெரியாத சில தளங்களும் லிங்களும் இருந்தன. இதனுடன், அந்த நபருக்குத் தெரியாத சில UPI பதிவுகள் மற்றும் ஃபிஷிங் SMS ஆகியவையும் இருந்தன. பணத்தை இழந்த பிறகு, அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது, அதில் அந்த நபர் தன்னை IFSO அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரிடம் வழக்கறிஞர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

SIM swapping Scam என்றால் என்ன?

மோசடி செய்பவர்கள் சிம் ஸ்வாப்பிங் மூலம் சிம் கார்டுகளைப் பெறுகிறார்கள். இதன் மூலம் பயனரின் விவரங்களையும் பணத்தையும் திருடுகின்றனர். மோசடி செய்பவர் பயனரின் சிம்மை அணுகும்போது, ​​பயனரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கேட்கிறார். இப்போதெல்லாம்,டூ பெக்டர் வெரிபிகேசன் அவசியமாகிவிட்டது, எனவே ஒரு மோசடி செய்பவர் உங்கள் சிம் கார்டை அணுகினால், உங்கள் முழு அக்கவுண்டையும் காலி செய்ய நேரம் எடுக்காது.

இதையும் படிங்க: Itel A70 4G iPhone போன்ற லுக்கில் அறிமுகமானது ஏழையின் ஐபோன் என கூறலாம்.

சிம் Swapping ஸ்கேமிளிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • உங்களின் சிம் திடிரென வேலை செய்வதை நிறுத்திவிட்டால் உடனே உங்களின் டெலிகாம் அப்பரேடருக்கு தகவலை சொல்லவும்.
  • பாஸ்வர்ட் இல்லாமல் உங்கள் மொபைலில் உங்கள் சிம்மை வேறொருவர் பயன்படுத்துவதைத் தடுக்க, சிம்மைப் லோக் செய்ய முடியும்.
  • உங்களின் தனிப்பட்ட அல்லது பேங்க் தகவல்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  • சந்தேகத்திற்கிடமான மெசேஜ் அல்லது காலை நீங்கள் பெற்றால், உடனடியாக அதன் இணைப்பைத் துண்டித்து, காவல்துறைக்குத் தெரிவிக்கவும்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo