SIM Card தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. நீங்களும் புதிய சிம் கார்டை வாங்க நினைத்தால், முதலில் புதிய விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர, நீங்கள் புதிய சிம் கார்டைப் பெறுவதும் எளிதாக இருக்கும். எனவே புதிய விதிகள் பற்றிய தகவலையும் வழங்குவோம்.
ஜனவரி 1 முதல் சிம் கார்டு வாங்கும் போது டிஜிட்டல் KYC மட்டுமே இருக்கும். முன்னதாக டாக்யுமென்ட் பிசிக்கல் வெரிபிகேசன் செய்யப்பட்டது. இதன் மூலம், சிம் கார்டு வழங்கும் செயல்முறை மிக வேகமாகவும், மக்களுக்கு எளிதாகவும் இருக்கும். பிசிக்கல் வேரிபிகேசனுக்காக நீங்கள் மிகவும் விலையுயர்ந்த டாக்யுமேன்ட்கள் சேகரிக்க வேண்டியிருந்தது, மேலும் நிறைய நேரம் எடுத்தது.
இது தொடர்பாக அரசு ஏற்கனவே முடிவு எடுத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில், சிம் கார்டு விற்பனையாளர்களின் சரிபார்ப்பும் செய்யப்படும். உண்மையில், இணைய மோசடியை சமாளிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது, இந்த சூழலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம், யார் வேண்டுமானாலும், யாருடைய பெயரிலும் சிம் கார்டைப் பெற்று அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டெலிகாம் டிப்பர்ட்மெண்டில் புதிய விதி ஜனவரி 1 முதல் சிம் கார்டுகளை வாங்கும் போது e-KYC மட்டுமே செய்யப்படும் என்று கூறுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். வாடிக்கையாளர்கள் பிசிக்கல் டாக்யுமேன்ட்களை வழங்க வேண்டியதில்லை, அதே நேரத்தில் டெலிகாம் நிறுவனங்கள் வெரிபிகேசன் செலவிட வேண்டிய செலவுகள் குறையும்.
இதையும் படிங்க: Redmi 13C மற்றும்13C 5G ஸ்மார்ட்போன் 7,999 ஆரம்ப விலையில் அறிமுகம்
இப்பொழுது டிஸ்டரியுட்டார் கடை ஊழியர்களின் வெரிபிகேசன் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் ஆகியவையும் செய்யப்படும். இதன் மூலம் சிம் வழங்கியவர் யார் என்பது தெளிவாகும், ஏதேனும் தவறு நடந்தால் அவரிடம் பதில் கேட்கப்படும். அதாவது மோசடி வழக்குகளை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இவற்றைச் சமாளிக்க புதிய உத்திகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் இந்த முடிவு குறித்து மேலும் பல செய்திகள் உள்ளன, ஆனால் புதிய சிம் பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை. சிம் கார்டைப் பெறுவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.