செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கபட்டது..!
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு நாடுகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றன.
நீண்ட நாட்களாக செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என்ற நோக்கத்தோடு பல கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து வரும் நிலையில் இப்பொழுது செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு நாடுகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு ஆய்வுக்காக ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற செயற்கைக்கோள் சில போட்டோக்களை அனுப்பியுள்ளது..
இந்த போட்டோக்களில் சோதனை செய்ததில் சிவப்புக் கோளின் துருவ பனி முகடுகள் உள்ள கிழக்குப் பகுதியில் ஏரி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஆழம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், பனி படலத்தில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கூறினார்கள் .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile