Samsung Galaxy Ring அறிமுகம், தம்மாதுண்டு ரிங்கில் இவ்வளவு அம்சமா
சாம்சங் தனது முதல் Samsung Galaxy Ring இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 சுகாதார கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங் 9 வெவ்வேறு சைஸ்களில் வருகிறது. சைஸ் 5 முதல் சைஸ் 13 வரை கிடைக்கும். 5 மற்றும் 7.0 mm திக்னஸ் கொண்ட 2.3 கிராம் எடை கொண்ட கேலக்ஸி ரிங் மிகவும் இலகுவானது. அத்தகைய டிசைனை கொண்டு, ஒரு நாள் முழுவதும் எளிதாக அணியலாம். Samsung Galaxy Ring யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல் பார்க்கலாம்.
Samsung Galaxy Ring விலை
Samsung Galaxy Ring யின் விலை ரூ.38,999. இந்த ரிங் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைலர் விற்பனைக் கடைகளுடன் கிடைக்கும். தங்கள் ரிங் சைஸ் பற்றி உறுதியாக தெரியாத கஸ்டமர்களுக்கு, Galaxy ரிங் வாங்குவதற்கு முன், சிறந்த பொருத்தத்தை சரிபார்க்க, சைஸ் கிட் பெறுவதற்கான விருப்பம் உள்ளது. உங்கள் சைஸ் கிட்டை பெற்ற 14 நாட்களுக்குள் ‘மை ஆர்டர்கள்’ பக்கத்தில் உங்கள் சைஸை சேர்க்க வேண்டும். 14 நாட்களுக்குப் பிறகு சைஸ் அப்டேட் செய்யாவிட்டால் ,உங்கள் ஆர்டர் ஆட்டோமேட்டிக்காக கேன்ஸில் செய்யப்படும் .
Galaxy Ring ஐ 1,625 ரூபாய் தொடக்க EMI யில் 24 மாத நோ கோஸ்ட் EMI விருப்பத்துடன் வாங்கலாம். கஸ்டமர்கள் அனைத்து பேங்க்களின் கார்டுகள் மூலமாகவும் Samsung Finance+ மற்றும் Bajaj Finance மூலமாகவும் வாங்கலாம். இது தவிர, அக்டோபர் 18, 2024 வரை வாங்குபவர்களுக்கு 25W டிராவல் அடாப்டரையும் Samsung வழங்குகிறது.
Samsung Galaxy Ring சிறப்பம்சம்.
Samsung Galaxy Ring ஆனது 5 முதல் 13 வரையிலான 9 சைஸ்களில் வருகிறது. இது 8MB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் வருகிறது. அளவு 5 2.3 கிராம் எடையும், அளவு 13 3.0 கிராம் எடையும் கொண்டது.
இந்த வளையத்தின் சார்ஜிங் கேஸில் 361mAh பேட்டரி உள்ளது, இது முழு சார்ஜில் 7 நாட்கள் நீடிக்கும். பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 40 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். இது எக்சிலோரோம்மீட்டார் சென்சார், PPG மற்றும் ஸ்கின் டெம்ப்ரட்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த வெப்சைட்டில் புளூடூத் 5.4 இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்தில் 10 ஏடிஎம், ஐபி68/டைட்டானியம் கிரேடு 5 பொருத்தப்பட்டுள்ளது. PC+SUS கீல் பொருட்களால் ஆனது, சார்ஜிங் கேஸ் 61.3 கிராம் எடை கொண்டது. கேலக்ஸி ரிங் சாம்சங் ஹெல்த் உடன் சுகாதாரத் டேட்டாவை வழங்குகிறது.
தூக்க முறைகளைப் புரிந்துகொள்வதற்கும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் AI அல்காரிதம்களுடன் கூடிய மேம்பட்ட தூக்க பகுப்பாய்வுகளை வழங்குகிறது, செயல்பாடு, ஸ்லீப் லேட்டசி , இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்ற தூக்க அளவீடுகளை கண்காணிக்கிறது. சுழற்சி கண்காணிப்பு என்பது இரவு முழுவதும் ஸ்கின் வெப்பநிலை மூலம் மாதவிடாய் சுழற்சிகளைக் கண்காணிப்பதாகும்.
Galaxy AI ஆனது எனர்ஜி ஸ்கோர் உள்ளிட்ட விரிவான சுகாதார அறிக்கைகளை உருவாக்குகிறது, இது தூக்கத்தின் தரம், செயல்பாட்டு நிலை, தூங்கும் இதய துடிப்பு மற்றும் இதய துடிப்பு மாறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மன நலனை அளவிடுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile