JioTag Air: உங்களின் தொலைந்த பொருளை கண்டுபிடிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Reliance Jio அதன் JioTag Air அறிமுகம் செய்துள்ளது
இது iOS மற்றும் Android கம்பர்டபிலாக இருக்கிறது,
இது Apple யின் Find My நெட்வர்க் மற்றும் JioThings உடன் வேலை செய்கிறது
Reliance Jio அதன் JioTag Air அறிமுகம் செய்துள்ளது, இது iOS மற்றும் Android கம்பர்டபிலாக இருக்கிறது, இது Apple யின் Find My நெட்வர்க் மற்றும் JioThings உடன் வேலை செய்கிறது, இதில் புளூடூத் 5.3 மற்றும் தொலைந்து போன பொருட்களைக் கண்டறிவதற்கான சவுண்ட் ஸ்பீக்கர் (90-120 db அவுட்புட் ) உள்ளது. இந்த டிவசில் இரண்டு வருட பேட்டரி லைப் கொண்டுள்ளது மற்றும் கூடுதல் பேட்டரி மற்றும் லேன்யார்ட் கேபிளை அடங்கியுள்ளது, Android பயனர்கள் JioThings ஆப் மூலம் பொருளை ட்ரேக் செய்ய முடியும், ஆப்பிள் பயனர்கள் தொடர்ந்து இருப்பிட புதுப்பிப்புகளுக்கு Find My பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். JioTag Air iOS 14+ இயங்கும் iPhoneகள் மற்றும் Android 9+ யில் இயங்கும் Android சாதனங்களை திவாசி செய்கிறது
JioTag Air விலை தகவல்
JioTag Air இந்தியாவில் 1,499 ரூபாயில் ஸ்பெசல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் அசல் விலை 2,999 ரூபாய். இது நீலம், சிவப்பு மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். சாதனத்தை JioMart, Reliance Digital மற்றும் Amazon.in மூலம் வாங்கலாம்.
JioTag Air சிறப்பம்சம்
JioTag Air ட்ரெக்கிங் டிவைஸ் கடந்த ஆண்டு JioTag யின் சக்செசர் ஆகும். இது JioThings ஆப் உடன் வேலை செய்யும். முந்தைய மாடலைப் போலன்றி, புதிய ஜியோடேக் ஏர் இப்போது ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க்கையும் ஆதரிக்கிறது. JioTag Air ஆனது Apple இன் AirTagஐப் போன்ற ஒரு சிறிய வடிவமைப்பைப் பெறுகிறது, இது பயனர்களுக்கு சாவிகள், அடையாள அட்டைகள், பணப்பைகள், பர்ஸ்கள், லக்கேஜ்கள், செல்லப்பிராணிகள் மற்றும் பிற அடிக்கடி தொலைந்து போகும் பொருட்களைக் கண்டுபிடித்து கண்காணிக்க உதவுகிறது. இது iOS மற்றும் Android டிவைஸ் இரண்டிலும் வேலை செய்கிறது மற்றும் வயர்லெஸ் டிராக்கிங்கிற்காக புளூடூத் அப்டேட் 5.3 உடன் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் போன்களின் உள்ள JioThings ஆப் உடன் இதை இணைக்க முடியும், அதே நேரத்தில் ஆப்பிள் பயனர்கள் அதை iOS இல் உள்ள Find My ஆப் மூலம் இணைக்க முடியும். JioTag Air யின் லோகேசன் iCloudக்கு அனுப்பும். JioTag Air யில் ஒரு இன் பில்ட் ஸ்பீக்கர் இருக்கிறது., தொலைந்து போன பொருட்களைக் கண்டறிய உதவும் 90-120 db அளவுக்கு உரத்த ஒலியை வெளியிடுகிறது. இதை Apple Find My நெட்வொர்க் அல்லது JioThings ஆப்ஸுடன் இணைக்க பயனர்கள் தேர்வு செய்யலாம், ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் இணைக்க முடியாது. JioTag Air ஆனது இரண்டு வருடங்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறுகிறது மற்றும் கூடுதல் பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிளுடன் வருகிறது.
JioTag Air iOS 14 மற்றும் அதற்க்கு மேற்பட்ட வெர்சனில் இயங்ககூடிய iPhone மற்றும் Android 9 மற்றும் மேலே உள்ள Android வேர்சங்களில் இயங்கும் Android டிவைஸ்களுடன் இணக்கமானது. ஏதேனும் காரணத்திற்காக கோட் துண்டிக்கப்பட்டால், அது எச்சரிக்கையை அளிக்கிறது. இதன் அளவு 3.8 x 3.8 x 0.7 செமீ மற்றும் எடை 10 கிராம் ஆகும்
இதையும் படிங்க BSNL Fibre Basic சூப்பர் சலுகை அறிவிவிப்பு இந்த ஆபர் Limited-Time மட்டுமே
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile