நீங்களும் WhatsApp யில் e-challan மெசேஜ் பெற்றிர்களா ? அப்படி வந்திருந்தால் தப்பி தவறி கூட பணம் செலுத்து விடாதிர்கள் நீங்கள் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, பல சந்தர்ப்பங்களில் சோசியல் மீடியா தளமான வாட்ஸ்அப்பில் OTP அனுப்பப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், வாட்ஸ்அப்பின் போலி மற்றும் உண்மையான மெசேஜ்கள் குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன. இதை scam செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு இ-சலான்களை அனுப்புகின்றனர். இந்த மெசேஜ் வியட்நாமின் ஹேக்கிங் குழுவால் அனுப்பப்பட்டது, இது டேட்டா திருட்டு மற்றும் வங்கி மோசடிக்கு காரணமாகிறது.
போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்துமாறு வற்புறுத்தி மோசடி செய்பவர்கள் போக்குவரத்து சேவையின் சார்பில் வாட்ஸ்அப்பில் போலியான மெசேஜை அனுப்புகின்றனர். இதற்காக, மோசடி செய்பவர்களால் மேல்வேர் APK (Android Application Package) இணைப்பு வழங்கப்படுகிறது. அதன் உதவியுடன், பயனர்கள் தங்கள் போன்களின் ஆப்பை டவுன்லோட் செய்யப்படுகிறார்கள், அதன் பிறகு அவர்களிடம் காண்டேக்ட்கள் போன் கால்கள் மற்றும் மேசெஜ்களின் விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்த மால்வேர் Wromba குடும்பத்தைச் சேர்ந்தது, இது இதுவரை சுமார் 4400 டிவைஸ்களில் சேதப்படுத்தியுள்ளது. இந்த மேல்வேர் மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது ஒன் டைம் பாச்ச்வர்டை (OTP) மற்றும் பிற முக்கிய மெசேஜ்களை கண்காணிக்கும். அதன் உதவியுடன், ஹேக்கர்கள் இ-காமர்ஸ் அக்கவுண்ட்களை அணுக முடியும். மோசடி செய்பவர்கள் நேரடியாக பணத்தை மாற்றுவதில்லை. அதற்கு பதிலாக, கிப்ட் கார்ட்களை வாங்கி அவற்றை ட்ரேன்ஸ்பர் செய்து கொள்கிறரர்கள் இதன் மூலம் சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான போலி ட்ரேன்ஸ்செக்சன் செய்ய முடியும்.
இந்த பாதிப்பு இந்தியா முழுக்க இருக்கும் குஜராத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து கர்நாடகா. வியட்நாமில் உள்ள Báºïc Giang மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட தாக்குபவர்கள், கண்டறிதலைத் தவிர்க்க ப்ராக்ஸி ஐபிகளைப் பயன்படுத்துகின்றனர், இதனால் அவர்களின் செயல்பாடுகளைக் கண்டறிவது கடினமாகிறது.
இதையும் படிங்க :Passport இனி எளிதாக அப்ளை செய்யலாம் இனி டாக்யுமென்ட் தேவை இல்லை