COMPUTEX 2018 குவல்கம் விண்டோஸ் PC ஸ்னாப்ட்ரகன் 850 சிப்செட் அறிமுகம் படுத்தியது

COMPUTEX 2018 குவல்கம் விண்டோஸ் PC ஸ்னாப்ட்ரகன் 850 சிப்செட் அறிமுகம் படுத்தியது
HIGHLIGHTS

இந்த குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 850 கொண்டு வருகிறது ஒரு 2.95 GHz Kryo CPU Adreno 630 பவர்புல் AI செயல்திறன் மற்றும் எப்போதும் 1.2 Gbps LTE வேகம் கொண்டுவருகிறது.

கம்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது.

தாய்வான் நாட்டு தலைநகரில் நடைபெறும் கம்ப்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 850 மொபைல் சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. விண்டோஸ் 10 சாதனங்களுக்கான உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய பிராசஸர் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

10என்எம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் க்ரியோ 385 சிபுயு மற்றும் 8 கோர்களையும் அதிகபட்சம் 2.95 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் செயல்திறன் வேகத்தை 30 சதவிகிதம் வரை அதிகரித்தும், பேட்டரி திறனை 20 சசதவிகிதம் வரை அதிகரித்தும், 20 சதவிகித வேகமான ஜிகாபிட் எல்டிஇ வேகம் வழங்குகிறது. 

புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் அதிக ஃபிடிலிட்டி பில்ட்-இன் ஆடியோ, விர்ச்சுவல் சரவுன்டு சவுன்டு,  aptX ஹெச்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் அல்ட்ரா ஹெச்டி தரத்தில் அதிக துல்லியமான தரவுகளை பிளேபேக் செய்யவும், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குவால்காம் தனது புதிய பிராசஸரில் இதற்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் மெஷின் லெர்னிங் எஸ்டிகே சேவையை பயன்படுத்த டெவலப்பர்களுக்கு வழி செய்கிறது.  

ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரில் குவால்காம் நிறுவனம் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு புதிய அமைப்புகள் மூலம் மெல்லிய மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு வழி செய்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் கொண்டு இயங்கும் விண்டோஸ் 10 சாதனங்கள் வரும் மாதங்களில் சந்தையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்பி, அசுஸ் மற்றும் இதர நிறுவனங்கள் முதற்கட்ட ஆல்வேஸ் கனெக்ட்டெட் கணினிகளை வெளியிட்ட நிலையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 கொண்டு வெளியாகும் சாதனங்களை எந்த நிறுவனங்கள் வெளியிடும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo