குவால்காம் யின் ஸ்னாப்டிராகன் சாடிலைட்சேவை அறிவிப்பு செயற்கைக்கோள் மூலம் மெசேஜ் பெறலாம்.

குவால்காம் யின் ஸ்னாப்டிராகன் சாடிலைட்சேவை அறிவிப்பு செயற்கைக்கோள் மூலம் மெசேஜ் பெறலாம்.
HIGHLIGHTS

குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது.

செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் முதல் இருவழி மெசேஜ் சேவை ஆகும்.

ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலக மக்கள் அனைவரையும் மொபைல் மெசேஜிங் மூலம் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்.

குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது. உலகில் முதல் முறையாக செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் முதல் இருவழி மெசேஜ் சேவை ஆகும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலக மக்கள் அனைவரையும் மொபைல் மெசேஜிங் மூலம் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்.

முதற்கட்டமாக இந்த சேவை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொடெம்-RF சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இந்த சேவை முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் இரிடியம் சாடிலைட் கான்ஸ்டெலேஷன் சார்ந்து இயங்கும்.

ஸ்னாப்டிராகன் சேட்டிலைட் ஸ்னாப்டிராகன் 5ஜி மோடம்-ஆர்எஃப் சிஸ்டம்ஸ் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இரிடியம் செயற்கைக்கோள் விண்மீன் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது பல OEMகள் மற்றும் பிற சேவை வழங்குநர்களுக்கு உலகளாவிய செயற்கைக்கோள் கவரேஜை வழங்கும். இரிடியத்தின் வானிலை-எதிர்ப்பு L-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன்களுக்கு அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் வழங்கும். 'எமர்ஜென்சி மெசேஜிங்' அம்சம் 2023 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தோன்றும்.

இது உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் மற்றும் இதர சேவை வழங்குவோருக்கு உலகளவில் கவரேஜ் வழங்கும். இரிடியம் வெதர்-ரெசிஸ்டண்ட் L-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் அப்லின்க் மற்றும் டவுன்லின்க் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடியது ஆகும்.

குவால்காம் மற்றும் இரிடியம் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டியை அடுத்த தலைமுறை பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கும். கார்மின் அவசரகால தொலைதொடர்புக்கு சப்போர்ட் செய்யும்.

இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சாடிலைட் மூலம் அவசரகால குறுந்தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.

ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலகம் முழுக்க கவரேஜ் கொண்டிருக்கும். இது இருவழி குறுந்தகவல் அனுப்புவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவற்றை மேற்கொள்ள செய்கிறது. NTN சாடிலைட் உள்கட்டமைப்பு மற்றும் கான்ஸ்டலெஷன்கள் கிடைக்கும் போது, ஸ்னாப்டிராகன் சாடிலைட் 5ஜி Non-Terrestrial Network (NTN) சப்போர்ட் வழங்கும். இது அவசரகால இருவழிகளில் குறுந்தகவல் சேவையை ஸ்மார்ட்போன்களில் வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo