உங்கள் போனின் பேட்டரி டவுன் ஆகும்போது உங்களுக்கு வேறு வழியில்லலாமல் பொது இடங்களில் சார்ஜ் செய்விர்கள், அதாவது பொது இடங்கள் என்று கூறும்போது மால்கள், சந்தைகள் அல்லது வேறு ஏதேனும் பொது இடங்களாக இருக்கலாம் நீங்கள் அப்படி சார்ஜ் செய்து வருபவர்களாக இருந்தால் இது உங்களுக்குகானதாகும் , பொது இடங்களில் சார்ஜ் செய்வது என்பது பாதுகாப்பானது அல்ல FBI சமீபத்தில் சாத்தியமான ஹேக்கிங் அபாயங்கள் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது மற்றும் மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் காணப்படும் பொது சார்ஜர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பவர் பேங்க்களை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விமான நிலையங்கள், ஹோட்டல்கள் அல்லது ஷாப்பிங் சென்டர்களில் இலவச சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் என்று FBI யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது. இதன் காரணமாக, பயனர்களின் சாதனத்தில் மேல்வெர் அல்லது உளவு சாப்ட்வெர் நிறுவப்பட்டுள்ளது. சாதனத்தை சார்ஜ் செய்ய நீங்கள் ஒரு எலெக்ட்ரிக்கல் அவுட்லெட்டை ப் பயன்படுத்தலாம்.
பயனர் பொது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், மேல்வெர் சாதனத்தைப் லோக் செய்யலாம் அல்லது தனிப்பட்ட டேட்டா மற்றும் பாஸ்வர்ட்க்ளை நேரடியாக சைபர் குற்றவாளிகளுக்கு அனுப்பலாம்.பொது USB சார்ஜிங் நிலையங்களில் உள்ள எல்க்ட்ரிக் சாதனங்களுக்கான அக்சஸி பெற, சைபர் குற்றவாளிகள் மேலவெர் சாதனங்களில் செலுத்துவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக FCC இணையதளம் கூறுகிறது.
ஜூஸ் ஜாக்கிங் என்பது ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு முறை. 2021 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் உள்ள பொது USB போர்ட்களை ஹேக்கர்கள் தாக்கி பயனர்களின் சாதனங்களில் மேல்வெர்களை செலுத்துகின்றனர்.
பயனர்கள் தங்கள் சொந்த சார்ஜர் அல்லது USB கேபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், டேட்டா பிளாக்கரைப் பயன்படுத்தவும் அல்லது முக்கியமான தகவல் இல்லாத சாதனத்தை சார்ஜ் செய்யவும். ஜூஸ் ஜாக்கிங்கிற்கு பலியாகாமல் இருக்க, உங்கள் சாதனங்களை பொதுவில் சார்ஜ் செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்