Petrol pumps யில் இதை செய்யவில்லை என்றால் 10000 அபராதம்

Updated on 16-May-2024

Petrol pumps இந்தியாவில் வாகன மாசுபாடு( pollution) தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சிகளுடன், CNG,LNG, biofuels, எத்தனால் கலவை மற்றும் பிற போன்ற கிரீன் ப்யுள் எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதோடு ஊக்குவிக்கப்படுகின்றன. வேலிடிட்டியாகும் PUC (மாசுக்கட்டுப்பாடு) சான்றிதழ் இல்லாத வாகனங்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் புனேவில் உருவாக்கப்பட்டு வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதை செய்யாதவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம்

PUC இல்லாத வாகனங்களை அடையாளம் காணும் புதிய ஆட்டோமேட்டிக் சிஸ்டம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. PUC சான்றிதழ்கள், வாகனம் மாசு உமிழ்வு ஸ்டேண்டர்ட் பின்பற்றி காற்றை சுத்தமாக வைத்திருப்பதை காட்டுகிறது. கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற மாசுபடுத்திகளை அளவிடுவதற்கு வாகன வெளியேற்றத்தை சான்றிதழ்கள் அளவிடுகின்றன.

Petrol Pumbs இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?

இந்த சிஸ்டம் புனேவில் உள்ள பெட்ரோல் பம்புகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனப் பதிவு நம்பர்களை ஸ்கேன் செய்து, அனைத்து வாகனங்களின் PUC ஸ்டேண்டர்ட் சரிபார்க்க, மத்திய டேட்டாபேஸ் உடன் தடையின்றி கிரேஸ் ரெப்ராஸ் செய்யப்படும் வாகனத்தின் PUC சர்டிபிகேட் எக்ஸ்பைர் ஆனது என கண்டறியப்பட்டால், ஓட்டுநர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் நேரடியாக SMS மூலம் அபராதம் பெறுவார்கள்.

இருப்பினும், சலான் செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது, இது வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். இது அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு ஓட்டுநர்கள் தங்கள் PUC ஐ அப்டேட் செய்ய அனுமதிக்கிறது. இதை எப்போது தொடங்குவார்கள் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக புனேவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு வெற்றி பெற்றால் மற்ற நகரங்களிலும் செயல்படுத்தலாம்.

இதையும் படிங்க :Tecno Camon 30 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :