2020 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், கூகிள் இப்போது சிறந்த போக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் ஆண்டின் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை விவரிக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பாரம்பரிய வழக்கப்படி Year In Search 2020 பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளை இந்தியா மற்றும் உலகளவில் பிரித்து பட்டியலிடும்.
இந்திய அளவில் பயனர்கள் ஐபிஎல், கொரோனாவைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் அதிகளவு தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதான் மந்த்ரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றியும் தேடி இரு்கின்றனர்.
அந்த வகையில் இந்த கூகுள் தேடலில் ‘coronavirus’, ‘US election’, ‘IPL’ மற்றும் ‘PM Kisan Yojana’ உள்ளிட்ட தலைப்புகளை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.
– இந்திய பிரீமியர் லீக்
– கொரோனாவைரஸ்
– அமெரிக்க தேர்தல் முடிவுகள்
– பிரதமர் கிசான் யோஜனா
– பீகார் தேர்தல் முடிவுகள்
– டெல்லி தேர்தல் முடிவுகள்
– தில் பெச்ரா
– ஜோ பைடன்
– லீப் நாள்
– அர்னாப் கோஸ்வாமி
– கொரோனாவைரஸ்
– தேர்தல் முடிவுகள்
– கோப் ப்ரியன்ட்
– ஜூம்
– ஐபிஎல்
– இந்தியா v நியூ சிலாந்து
– கொரோனவைரஸ் அப்டேட்
– கொரோனாவைரஸ் சிம்ப்டம்ஸ்
– ஜோ பைடன்
– கூகுள் கிளாஸ்ரூம்
ஒட்டுமொத்த பட்டியல் தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது. இத்துடன் How To மற்றும் What is போன்ற கேள்விகள் நிறைந்த தேடல்களும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.