RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதன்கிழமை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இது Paytm Payment Bank Limited-க்கு ஒரு அடியை அளிக்கிறது. இந்த தகவலை மத்திய பேங்க் வெளியிட்டுள்ள ப்ரெஸ் ரிலீஸில் வெளியிட்டது, Paytm பேமென்ட் பேங்க் லிமிடெட் (PPBL) பேங்கின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்று வெளிப்புற தணிக்கையாளர்களின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது இதனால் ரிசர்வ் பேங்க் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளரின் அக்கவுண்டிலும் டெபாசிட் செய்ய Paytm Payments பேங்க் அனுமதிக்கப்படாது என்று RBI தெரிவித்துள்ளது. வாலெட் உட்பட எந்த கடன் பரிவர்த்தனையும் அனுமதிக்கப்படாது என்று அது கூறுகிறது. வாடிக்கையாளர்கள் மீதம் உள்ள தொகையை எடுக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படும் என ரிசர்வ் பேங்க் தெரிவித்துள்ளது.
பேங்க் வாடிக்கையாளர்கள் சேவிங் அக்கவுன்ட் கரண்ட் அக்கவுன்ட் ப்ரீபெய்ட் இன்ச்ஸ்ட்ருமேன்ட்ஸ் FASTag, தேசிய பொது மொபிலிட்டி கார்டு (NCMC) உள்ளிட்ட தங்கள் அக்கவுண்ட்களிளிருந்து பேலன்ஸ் தொகையை திரும்பப் பெறுதல் அல்லது பயன்படுத்துதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படும்.
அதாவது, சேவிங் பேங்க் அக்கவுன்ட் கரண்ட் அக்கவுன்ட் மற்றும் ஃபாஸ்டாக் போன்றவற்றில் ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திரும்பப் பெறலாம் அல்லது பயன்படுத்தலாம்,பேங்க் ஒழுங்குமுறைச் சட்டம்-1949 யின் பிரிவு 35A இன் கீழ் Paytm Payments பேங்கின் எதிராக RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிசர்வ் பேங்கின் இந்த நடவடிக்கையின் முதல் இலக்கு Paytm யின் பேங்க் செயல்பாடுகள் ஆகும், இது வாடிக்கையாளர்கள் தங்கள் பேங்க் வெளிப்புற பேங்குடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை டிஜிட்டல் கட்டணங்களுக்கு Paytm ஐப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதையும் படிங்க:Vi பயனர்களுக்கு சந்தோசமான செய்தி விரைவில் 5G சேவை
இவை அனைத்திற்கும் மத்தியில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் உத்தரவின் கீழ், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கான தடையுடன், 29 பிப்ரவரி 2024 முதல் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டிலும் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்படும்.
Paytm FASTag வாடிக்கையாளர்கள் தங்கள் பேலன்ஸ் நிரப்புவதற்கு RBI அனுமதித்துள்ளது, ஆனால் மார்ச் 1 முதல், இந்த சாதனங்களில் அவர்கள் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.