Paytm crisis: பிப்ரவரி 29 FasTag QR, UPIபயன்படுத்த முடியுமா உங்களின் அனைத்து கேள்விக்கு பதில் ?

Updated on 08-Feb-2024
HIGHLIGHTS

Paytm Payments Bank லிமிடெட் யின் சேவையில் புதிய டெப்பாசிட் மற்றும் கிரெடிட் ட்ரேன்செக்சன் தடை செய்துள்ளது

Paytm Wallet, FasTag, UPI பயன்படுத்த முடியாம என்ற பல கேள்விகள் எழுகிறது

பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளரின் அக்கவுண்டிலும் டெபாசிட் செய்ய Paytm Payments bank அனுமதிக்கப்படாது

இந்திய ரிசர்வ் பேங்க் (RBI)Paytm Payments Bank லிமிடெட் யின் சேவையில் புதிய டெப்பாசிட் மற்றும் கிரெடிட் ட்ரேன்செக்சன் தடை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பேங்க் பின்பற்றவில்லை என தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவியதையடுத்து, மக்களிடையே பல தவறான எண்ணங்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக Paytm தொடர்பாக மக்கள் மனதில் இருக்கும் பல பொதுவான கேள்விகளுக்கான பதில்களை இங்கே தரப்போகிறோம். மார்ச் 1 முதல் Paytm முழுமையாக மூடப்படும் என்று சிலர் நம்புகிறார்கள் இதை தவிர மக்கள் Paytm Wallet, FasTag, UPI பயன்படுத்த முடியாம என்ற பல கேள்விகள் எழுகிறது இது போன்ற உங்களின் பல கேள்விக்கு இங்கு பதிலளிக்குறோம்

முதலில், பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளரின் அக்கவுண்டிலும் டெபாசிட் செய்ய Paytm Payments bank அனுமதிக்கப்படாது என்று RBI கூறுகிறது wallet உட்பட எந்த கிரெடிட் ட் ரேன்செக்சன் அனுமதிக்கப்படாது என்று அது கூறுகிறது. Paytm யின் அடிப்படை அம்சங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட Paytm Payments பேங்க் பற்றி இங்கே பேசுகிறோம்.

Paytm Payments Bank என்றால் என்ன?

Paytm Payments Bank அசல் Paytm யிலிருந்து தனிப்பட்டதாகும், நாட்டில் உள்ள அனைத்து பேங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பேங்க் அக்கவுண்ட்களை திறப்பது போலவே, Paytm பேமென்ட் பேங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் வசதியை வழங்குகிறது. இவை அனைத்தும் கிட்டத்தட்ட நடக்கும். வாடிக்கையாளர்களுக்கு விர்ச்சுவல் டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது. அக்கவுன்ட் திறந்த பிறகு, எந்தக் அக்கவுண்டிற்கும் பணத்தை மாற்றலாம். டெபாசிட் திரும்பப் பெறலாம். Paytm Payments Bank இன்டர்நெட் பேங்க் மொபைல் பேங்க் UPI ட்ரேன்செக்சன் போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டிலேயே, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு Paytm பேமெண்ட் பேங்கை RBI தடை செய்தது.

Paytm ஆப் என்றால் என்ன?

நீங்கள் Paytm ஆப் பயன்படுத்துகிறிர்கள் என்றால், இந்த ஆப்ஸ் PhonePe அல்லது Google Pay போன்று செயல்படுகிறது. மூவீ டிக்கெட் புக்கிங் ஆப் பில் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல் போன்ற அதன் அம்சங்களை Paytm Payments பேங்க் அக்கவுன்ட் இல்லாமல் கூட பெறலாம். உங்கள் பேங்க் அக்கவுன்ட்களில் ஏதேனும் ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் நம்பரை கொண்டு பதிவு செய்தால் போதும், அதில் ட்ரேன்செக்சன் நடந்து கொண்டே இருக்கும். லோகின் செய்த பிறகு, Paytm வாலட்டில் தொகையை ஏற்றுவதன் மூலமோ அல்லது UPI ஐ நேரடியாக இணைப்பதன் மூலமோ Paytm ஆப் இயக்கப்படுகிறது.

பிப்ரவரி 29க்கு பிறகு எந்த எந்த சேவையில் பாதிப்பு ஏற்ப்படும் ?

பிப்ரவரி 29க்குப் பிறகு, எந்தவொரு வாடிக்கையாளர் அக்கவுன்ட் ப்ரீபெய்ட் கார்டு, வாலட், ஃபாஸ்டாக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) போன்றவற்றில் டெபாசிட்கள், கிரெடிட் ட்ரேன்செக்சன் டாப்-அப்கள் அல்லது திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படாது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் Paytm Fastag யில் தங்களுடைய தற்போதைய பேலன்சை தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்ய முடியாது.

இதை போல் paytm Bank வாலெட் உடன் பயனர்கள் வாலட்டைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் ஆனால் பிப்ரவரி 29க்கு பிறகு வாலேட்டில் பணம் சேர்க்க முடியாது. இருப்பினும், பிப்ரவரி 29க்குப் பிறகு வாலட்டில் இருக்கும் பேலன்ஸ் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை.

Paytm FASTag பயன்படுத்த முடியுமா?

Paytm FasTag நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும், Paytm Payments பேங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாகும்.

FASTag சேவை நேரடியாக Paytm வாலட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 க்குப் பிறகு ரிசர்வ் பேங்க் அதன் சேவைகளைத் தடைசெய்துள்ளதால், பயனர்கள் அதில் எந்த புதிய பேலன்சை சேர்க்க முடியாது. இது அடிப்படையில் Paytm FASTag செயலிழக்கச் செய்கிறது.

இருப்பினும் நீங்கள் paytm FASTag பயன்படுத்தமுடியும் அதவது அதிலிருக்கும் பெலன்சுக்கு முழுமையாக அந்த வால்லேடில் இருக்கும் பணத்தை பயன்படுத்தலாம்.

எந்த எந்த சேவைகளில் எந்த பதிப்பும் இருக்காது ?

UPI சேவைகள் பயன்படுத்த முடியுமா?

Paytm படி, Paytm QR, Paytm சவுண்ட்பாக்ஸ், Paytm கார்டு மெஷின் போன்ற சலுகைகள் RBI ஆல் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளன, அதாவது பிஸ்னஸ் சேவைகள் பாதிக்கப்படாது. இதை தவிர அனைத்து UPI சேவைகளும் பிப்ரவரி 29 எந்த ஒரு இடையுருயின்றி வேலை சே யும்

அதாவது திங்கள்கிழமை Paytm கூறியது என்னவென்றால், UPI சேவைகள் எப்பொழுதும் போல் சாதரணமாக பயன்படுத்தலாம்

Paytm யில் ரீச்சார்ஜ் மற்றும் பில் பேமன்ட் செய்யமுடியுமா?

ஆம், பயனர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பில் பேமெண்ட்கள் மற்றும் ரீசார்ஜ்களுக்கு Paytm தொடர்ந்து பயன்படுத்தலாம். மூவீ டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள் போன்றவற்றை முன்பதிவு செய்தல் போன்ற சேவைகளை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Paytm யில் இருக்கும் காசு பாதுகாப்பாக இருக்குமா?

Reserve Bank of India (RBI) பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு Paytm Payments பேங்க் அக்கவுன்ட் வாலட்டைப் புதிய டெபாசிட்களை ஏற்கவோ அல்லது கிரெடிட் ட்ரேன்செக்சன் அனுமதிப்பதையோ கட்டுப்படுத்தும்

இருப்பினும், பிப்ரவரி 29, 2024க்குப் பிறகும் உங்களின் தற்போதைய பேலன்சிளிருந்து பணத்தை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை.

இதையும் படிங்க:Upcoming Smartphone: இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் டாப் சூப்பர் ஸ்மார்ட்போன்

Paytm Mutual Funds, Money Stock Account என்ன ஆகும்.

Paytm யின்கூற்றுப்படி, Paytm Money மூலம் பயனர்கள் செய்யும் அனைத்து முதலீடுகளும் பாதுகாப்பானவை மற்றும் Paytm Payments பேங்கின் சமீபத்திய RBI உத்தரவு Paytm Money Limited (PML) செயல்பாடுகளையோ அல்லது பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது NPS யில் அவர்களின் முதலீடுகளையோ பாதிக்காது. Paytm Money Limited ஆனது SEBI-ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முழுமையாக இணக்கமானது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :