Permanent Account Number (PAN) இது ஒரு முக்கிய ஆவணமாகும், நம்மில் பெரும்பாலோருக்கு வரி தாக்கல் செய்வதிலிருந்து பேங்க் அக்கவுன்ட் திறப்பது வரை முக்கிய ஆவணமாக PAN கார்ட் தேவைபடுகிறது, உங்கள் பான் கார்டு ஸ்மார்ட்டாகவும், வேகமாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாறியிருந்தால் கற்பனை செய்து பாருங்கள். புதிய PAN 2.0 என்ன அதனால் என்ன பயன் என்பதை முழுசாக பார்க்கலாம்.
சமிபத்தில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), 1,435 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. வரி தொடர்பான சேவைகளை மிகவும் திறமையாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய அடியை எடித்து வைத்துள்ளது.
PAN 2.0 என்பது சமிபத்திய PAN/TAN எகொசிஸ்டத்தின் அப்க்ரேட் வெர்சனாகும். இது வருமான வரி செலுத்துவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்த டிசைன் செய்யப்பட்டுள்ளது . இது வரி செலுத்துவோர் ரெஜிஸ்ட்ரேசன் சேவைகள் செயல்படும் விதத்தை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட இ -ஆளுமை முயற்சியாகும். PAN 2.0 உடன், PAN வெரிபிகேசன் சேவைகள் உட்பட முக்கிய மற்றும் கூடுதல் PAN தொடர்பான செயல்பாடுகள் இரண்டும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்திற்கு உட்படும்.
PAN 2.0 திட்டம் வரி செலுத்துவோருக்கு பல நன்மைகளை வழங்கும், இது ஒரு அப்க்ரேட் மட்டுமல்ல, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தில் ஒரு முக்கிய படியாகவும் இருக்கும்:
PAN 2.0 யின் அற்புதமான அம்சங்களில் ஒன்று PAN கார்டுகளில் QR கோட்களை அறிமுகப்படுத்துவதாகும். அரசாங்க அமைப்புகளின் அனைத்து டிஜிட்டல் சிஸ்டம்களும் PAN ஒரு பொதுவான அடையாளங்காட்டியாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் தளங்களின் PAN ஒன்று இணைப்பதன் மூலம் PAN 2.0 திட்டம் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மிசியன் பலப்படுத்துகிறது.
இதையும் படிங்க:டிசம்பர் 1 முதல் OTP வராத ? TRAI புதிய ரூல் என்ன Jio, Airtel, Vi மற்றும் BSNL கஸ்டமர்கள் தெருஞ்சிகொங்க