மீடியா அறிக்கையின்படி சென்னையை சேர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Royal Enfield எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கிவருவதாக கூறப்படுகிறது இதை அதிகாரபூர்வமாக இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் செய்யலாம் என்பதை முழுமையாக பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக மீடியா செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக, இந்நிறுவனம், வரும் ஆண்டுகளில், ஒன்றரை ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். தகவல்களின்படி, நிறுவனம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் பரோட்டோடைப் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் இந்த ஆண்டுக்குள் இந்த ப்ரோட்டோடைப் வெர்சனைதயாரிக்கலாம்.
நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கை கொண்டு இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை, ஆனால் மீடியா அறியின்படி அதன் ப்ரொடைப் வெர்சன் தயாரான பிறகு, அதன் தயாரிப்பு வெர்சனை அடுத்த ஆண்டுக்குள் கொண்டு வர முடியும்.
அறிக்கையின் படி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் பைக் புதிய பிளாட்பார்மில் உருவாக்குகிறது. தகவலின்படி, இது புத்தம் புதிய L பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். இதனுடன், ஸ்பெயினின் ஸ்டோர்க் பியூச்சர் எஸ்எல் என்ற நிறுவனத்துடன் மற்றொரு எலக்ட்ரிக் பைக்கையும் நிறுவனம் கொண்டு வரலாம்.
மீடியா அறிக்கையின்படி, ராயல் என்ஃபீல்டின் எலக்ட்ரிக் பைக்கில் 96 வோல்ட் சிஸ்டம் கொடுக்கப்படலாம். இதன் காரணமாக பைக் பெட்ரோல் பைக் போன்ற சக்தியைப் பெறலாம், ஆனால் நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. .
எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் பிரிவில் தொடர்ந்து புதிய நிறுவனங்கள் காலம் இறங்கி வருகிறது, மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய விருப்பங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, இதுபோன்ற சூழ்நிலையில் இதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தனது என்ட்ரியை கொடுத்து வருகிறது, சமீபத்திய அறிக்கையின் படி ஹோண்டா போன்ற பெரிய நிறுவங்களும் அடுத்த ஆண்டுக்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.