நாம் நாட்டின் க்ரேட் மிஸைல் மேன் D r ApJ . அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது..
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி நமது நாட்டுக்காகவே தன வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
இவர் சாதாரணமாக நம் தமிழ் நாட்டில் உள்ள , இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். அவர் எவ்வளவு தான் ஏழ்மையில் இருந்தவாகினும் அவர் வாழைக்காயின் குறிக்கோளை எப்பொழுதும் விட்டுவிடவில்லை.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
மறக்க முடியாத நாள்
அவர் பள்ளி ககுழந்தைகள் மீது பெற அன்பு கொண்டவர் என, நம் அனைவருக்கு தெரிந்தது, அதுமட்டுமல்லாமல் நாளைய உலகம் நமது இந்தியாவின் தூண்களான இளைஞர் கையில் இருக்கிறது என்று இவர் கூறிய அந்த வார்த்தை இன்னும் நம் மனதில் ஒழித்து கொண்டு தான் இருக்கிறது அவரின் நினைவு நாளான ஜூலை 27,2015 ஆண்டு மறக்க முடியுமா நம்மால். அவர் ஆசையை போலவே நமது நாடு வல்லரசு ஆக உரடி மொழி எடுத்து கொள்வோம்.நம் நாட்டின் க்ரேட் சைன்டிஸ்ட் என்ற பெயரையும் வாங்கி உள்ளார், அவரை போல நம் நாட்டில் நல்ல விஞ்ஞானியாக இருக்க வேண்டும்.