OnePlus Pad 2 டேப்லெட்டில் அதிரடியாக 10ஆயிரம் வரை அதிரடி குறைப்பு

Updated on 04-Nov-2024

OnePlus Pad 2 டேப்லெட் குறைந்த விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், இந்த டேப்லெட் ஜூலையில் அறிமுகம் செய்தது மற்றும் இப்போது பண்டிகைக் காலத்தில் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். நிறுவனம் இந்த டேப்லெட்டை ரூ.47,999 MRP விலையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது அதன் விலை ரூ.40,999 ஆக குறைந்துள்ளது. இது தவிர, வாடிக்கையாளர் அதை வங்கி சலுகை மூலம் வாங்கினால், விலை இன்னும் குறையும் ஆபர் மற்றும் பல தகவல்களை பற்றி பார்க்கலாம்.

OnePlus Pad 2 விலை

OnePlus Pad 2 டேப்லெட் ரூ,40,999 யில் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது, ஆனால் இப்பொழுது MRP விலையிலிருந்து 7ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது, இதனுடன், அமேசான் பேங்க் சலுகைகளையும் வழங்குகிறது, அதன் பிறகு அதை இன்னும் மலிவாக வாங்கலாம். கஸ்டமர்கள் ICICI கார்டு மூலம் டேப்லெட்டை வாங்கினால், கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். அதன் பிறகு இந்த டேப்லெட்டின் பயனுள்ள விலை ரூ.37,999 ஆக உள்ளது. அதாவது MRP விட ரூ.10,000 குறைந்த விலையில் இந்த டேப்லெட்டை வாங்க முடியும்.

OnePlus-Pad-2-1.jpg

OnePlus Pad 2 சிறப்பம்சம்.

OnePlus Pad 2 யில் 12.1 இன்ச் டிஸ்ப்ளே உடன் அதன் ரெசளுசன் 2,120×3,000 ப்[இக்சல் இருக்கிறது, மேலும் இது Android 14 உடன் பெஸ்ட் OxygenOS 14 யில் இயங்குகிறது , இது 144Hz ரெப்ராஸ் ரேட் , 303ppi பிக்சல் டென்சிட்டி , 88.40 சதவீதம் ஸ்க்ரீன் பாடி ரேசியோ மற்றும் 900 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்க்ரீனில் டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் இருக்கும்.

OnePlus Pad 2 ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. இது குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் புளூடூத் 5.4, வைஃபை 7, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். டேப்லெட் பேஸ் அங்கீகாரத்தை சப்போர்ட் செய்கிறது.

OnePlus Pad 2 யின் OnePlus Stylo 2 மற்றும் Smart Keyboard உடன் லேப்டாப் மாற்ற முடியும், போர்ட்டபிள் விசைப்பலகை ஒரு காந்த வைத்திருப்பவர் மற்றும் சரிசெய்யக்கூடிய சாய்வைக் கொண்டுள்ளது, இது 110 டிகிரி முதல் 165 டிகிரி வரை சாய்கிறது. OnePlus Pad 2 ஆனது 9,510mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் சைஸ் 268.66×195.06×6.49mm மற்றும் எடை 584 கிராம்.

இதையும் படிங்க Nothing Phone 2a Plus யின் புதிய Community எடிசன் இந்தியாவில் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :