Ola வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.15,000 உயர்வு.

Ola வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.15,000 உயர்வு.
HIGHLIGHTS

பெங்களூருவை தளமாகக் கொண்ட EV (Electric Vehicles) தயாரிப்பாளரான Ola Electric இந்திய மார்க்கெட்யில் அதன் S1 ரேஞ்சின் விலையை உயர்த்தியுள்ளது.

Ola தற்போது Ola S1, S1 Pro மற்றும் S1 Air ஆகிய மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் கொண்டுள்ளது.

இந்திய அரசு சமீபத்தில் FAME-II மானியத்தை ஒரு kWhக்கு ரூ. 15,000 லிருந்து ரூ. 10,000 ஆகக் குறைத்துள்ளது, இப்போது அதன் விளைவு எலக்ட்ரிக் வாகனங்களின் விலையில் காட்டத் தொடங்கியுள்ளது.

இந்திய அரசு சமீபத்தில் FAME-II மானியத்தை ஒரு kWhக்கு ரூ. 15,000 லிருந்து ரூ. 10,000 ஆகக் குறைத்துள்ளது, இப்போது அதன் விளைவு எலக்ட்ரிக் வாகனங்களின் விலையில் காட்டத் தொடங்கியுள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்ட EV (Electric Vehicles) தயாரிப்பாளரான Ola Electric இந்திய மார்க்கெட்யில் அதன் S1 ரேஞ்சின் விலையை உயர்த்தியுள்ளது. Ola தற்போது Ola S1, S1 Pro மற்றும் S1 Air ஆகிய மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் கொண்டுள்ளது.

TOI Auto இன் படி, Ola Electric கம்பெனி Ola S1 யின் விலையை 1,14,999 ரூபாயில் இருந்து 1,29,999 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் S1 Air தற்போது ரூ.84,999ல் இருந்து ரூ.99,999 ஆக அதிகரித்துள்ளது. வரிசையின் மிகவும் பிரீமியம் மாடலான S1 Pro ரூ.1,24,999 முதல் ரூ.1,39,999 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பேம்-II மானியம் உட்பட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் ஆகும். அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் கம்பனியின் ஆஃபீசியல் வெப்சைட் புதிய விலைகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

Ola S1 Pro ஆனது 4 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் FAME-II பிளானின் கீழ் 59,550 ரூபாய் மானியம் பெறுகிறது என்று ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இருப்பினும், மானியத்தில் மாற்றத்திற்குப் பிறகு, இந்த மாடல் இப்போது 22,268 ரூபாய் மானியத்தைப் பெறுகிறது, அதே நேரத்தில் S1 இப்போது 44,700 ரூபாய்க்கு பதிலாக 20,678 ரூபாய் மானியத்தைப் பெறும்.

மானியம் Ola Electric கம்பெனியை மட்டும் பாதிக்கவில்லை. Ather Energy சமீபத்தில் அதன் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை 32,500 ரூபாய்க்கு உயர்த்துவதாக அறிவித்தது. உயர்த்தப்பட்ட விலை நாளை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.

வேறு எந்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் தற்போது விலை உயர்வை அறிவிக்கவில்லை, ஆனால் மானியம் அனைவரையும் பாதிக்கும் என்பதால், விரைவில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo