Okaya இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம்

Okaya இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம்
HIGHLIGHTS

புதிய ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலில் 800 வாட் BLDC ஹப் மோட்டார் மற்றும் 60V36Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஒகாயா இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஃபாஸ்ட் F2 சீரிசில் மூன்றாவது வேரியண்ட் ஆக ஃபாஸ்ட் F2F அறிமுகமாகி இருக்கிறது.

ஹார்டுவேரை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ஸ்ப்ரிங் லோடெட் ஹைட்ராலிக் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் யூனிட்கள் உள்ளன. இத்துடன் ரிமோட் கீ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மூன்று வித டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடல் – மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சியான், மேட் கிரீன், மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் வைட் என ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

ஒகாயா ஃபாஸ்ட் F2F மாடலில் 800 வாட் BLDC ஹப் மோட்டார் மற்றும் 60V36Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்று் மோட்டார் உடன் இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo