கையில் மாட்டி கொள்ளும் வகையில் ஒரு ஸ்மார்ட்போனை பற்றி உங்களுக்கு தெரியுமா…!

Updated on 02-Sep-2018
HIGHLIGHTS

Z.E . நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை IFA 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

Z.E . நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை IFA  2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகையில் இருக்கும் என்  தெரிகிறது 

வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED டச் ஸ்கிறீன்  , முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் ஹார்ட்  பீட்  சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது

இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான LED மற்றும் கால்களை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.

அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :