நோக்கியா இந்தியாவில் 4G சப்போர்டுடன் டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது.

நோக்கியா இந்தியாவில் 4G சப்போர்டுடன் டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது.
HIGHLIGHTS

Nokia T21 ஆனது 10.36-இன்ச் 2K LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

5: 3 என்ற அஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது மற்றும் பிரைட்னஸ் 360 nits ஆகும்.

ஸ்டைலஸுடன் Wacom WGP மற்றும் Wacom Active ESE 2.0 ஆகியவற்றுக்கான சப்போர்ட் உள்ளது.

எச்எம்டி குளோபல் கம்பெனி தனது புதிய Nokia T21 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Nokia T20 யின் மேம்படுத்தப்பட்ட அப்டேட் வெர்சன் ஆகும். Nokia T21 SGS குறைந்த நீல ஒளி சான்றிதழுடன் 10.36-இன்ச் 2K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 8200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 Nokia T21 இல் கொடுக்கப்பட்டது.

Nokia T21 யின் விலை
Nokia T21 ஆனது Wi-Fi மற்றும் Wi-Fi + LTE வகைகளில் கிடைக்கிறது. Wi-Fi வேரியண்டின் விலை ரூ.17,999 மற்றும் Wi-Fi உடன் LTE வேரியண்டின் விலை ரூ.18,999. இரண்டு வகைகளும் ஜனவரி 22 முதல் சார்கோல் கிரே நிறத்தில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வரும். டேப்பை முன்பதிவு செய்தால், ரூ.1,999 மதிப்புள்ள பிளிப் கவர் இலவசமாக கிடைக்கும். 

Nokia T21 யின் ஸ்பெசிபிகேஷன்
Nokia T21 ஆனது 10.36-இன்ச் 2K LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 5: 3 என்ற அஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது மற்றும் பிரைட்னஸ் 360 nits ஆகும். இதன் மூலம், Widevine L1 சப்போர்ட் செய்கிறது, எனவே நீங்கள் Netflix HD வீடியோக்களைப் பார்க்கலாம். இதனுடன், ஸ்டைலஸுக்கு சப்போர்ட் உள்ளது. ஸ்டைலஸுடன் Wacom WGP மற்றும் Wacom Active ESE 2.0 ஆகியவற்றுக்கான சப்போர்ட் உள்ளது.

Nokia T21 ஆனது 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் Unisoc T612 ப்ரோசிஸோர் உடன் 512 GB வரை அதிகரிக்கலாம். கேமராவைப் பற்றி பேசுகையில், 8 மெகாபிக்சல் பேக் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பிரான்ட் கேமரா உள்ளது. கேமராவுடன் ஆட்டோபோகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் லைட்டுக்கான சப்போர்ட் உள்ளது. Nokia T21 ஆனது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் கூடிய OZO ஸ்பேஷியல் ஆடியோவிற்கு சப்போர்ட்டையும் கொண்டுள்ளது.

கனெக்ட்டிவிட்டிற்காக, Nokia T21 ஆனது Wi-Fi, Bluetooth 5.0, 4G, GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றிற்கான சப்போர்ட்டை கொண்டுள்ளது. டேப் 8200mA பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 3 நாட்கள் பேட்டரி பேக்கப்வழங்குவதாகக் கூறப்படுகிறது. பேட்டரியுடன் 18W சார்ஜிங்கும் உள்ளது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo