New year scam :ஒவ்வொருவரும் ஒரு மாதமுளுதும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை புதிய ஆண்டை வரவேர்ப்பதர்க்காக நாம் நம் நண்ம்பர்களுடன் வெளியூர் சென்று கொண்டாட பிளான் செய்வோம் அந்த வகையில் இதை படித்து கொண்டிருக்கும் நீங்கள் ஒரு பிளான் வைத்து இருக்கலாம் விடுமுறைக்கு செல்ல முயற்சிக்கும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் மோசடி(Scam) செய்பவர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாக மாறுகிறது . இது போல அதிகம் நடைபெறும் மூன்று பிரபலமான மோசடிகளுக்கு எதிராக கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்களும் ஏமாறாமல் பார்த்துக்கொள்ள இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது, விடுமுறை மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஒரு வெப் போஸ்ட்டில் , ஜிமெயில் 99.9% ஸ்பேம், ஃபிஷிங் மற்றும் மேல்வேர் பாதுகப்பு என்று நிறுவனம் கூறியது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த விடுமுறைக் காலத்தில் மோசடி செயல்பாட்டை ஏற்கனவே 35% குறைத்துள்ளன, பயனர்களின் இன்பாக்ஸை அடைவதற்கு முன்பே பல மேல்வேர் மெசேஜ்கள் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டிய சில மோசடிகள் இங்கே உள்ளன அவை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
New Year Holiday scams
- இன்வைஸ் ஸ்கேம்:- ஸ்கேமர்ஸ் போலியான விலைபட்டியல் (invoices) அனுப்புவார்கள், இந்த இன்வாய்ஸ்கள், கட்டணங்களில் இருந்து விடுபட பயனர்களை நம்பரை அழைக்கும்படி கேட்கின்றன. காண்டேக்ட் ஏற்பட்டவுடன், மோசடி செய்பவர்கள் போலிக் கடை உருவாக்கி, மோசடிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்க வைப்பார்கள்.
- செலிப்ரட்டி ஸ்கேம் : அப்பாவி மக்களை ஏமாற்றி பிரபலங்கள் பெயர் அல்லது பிரபலங்களை பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது, அதவது மோசடி செய்பவர்கள் தங்களை பிரபலங்களாக காட்டிக்கொள்கிறார்கள் அல்லது தங்களின் பொருள் என்று விளம்பரப்படுத்துவது. அது உண்மையாக நம்ப வேண்டும் என பல ஆபர் சலுகைகளும் கொடுப்பார்கள், மேலும் ஒரு பிரபலம் அவற்றை சப்போர்ட் செய்தால், பல பயனர்கள் அவற்றை நம்புவோர்கள்.
- மிரட்டல் மோசடி :இதில் மோசடி செய்பவர் பொய்யாக ஒரு மிரட்டலை இமெயிலில் அனுப்புவார்கள் அதில் அந்த பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட தகவல்களான பாதிக்கப்படவரின் முகவரி போட்டோ, லோகேசன் போன்றவற்றை கொண்டு அச்சுறுத்தும்படி ஈமெயில் அனுப்புவார்கள் மேலும் அதை பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் கேட்கப்படும் அவ்வாறு அனுப்பவவில்லை என்றால் டல்ரீதியாக தீங்கு விளைவிப்போம் அல்லது அவர்களின் முக்கியமான தகவல்களை வெளியிடுவார்கள் என்று அச்சுறுத்துகின்றனர்.
எனவே நீங்கள் இது போன்ற மோசடியிலிருந்து இந்த விடுதலை மோசடியிலிருந்து பாதிக்கப்படாமல் எச்சர்க்கை இருங்கள்
இதையும் படிங்க:Aadhaar Card Free அப்டேட் மீண்டும் தேதியை அதிகரிக்கப்பட்டது புதிய தேதி என்ன பாருங்க
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.