UPI கஸ்டமர்களுக்கு எச்சரிக்கை April 1 முதல் இந்த மொபைல் நம்பர் காரர்கள் எச்சரிக்கை

நேஷனல் பேமண்ட் கார்பரேசன் ஆப் இந்தியா UPI ட்ரேன்செக்சன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்க NPCI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இந்த வழிகாட்டுதல்களின் கீழ், பேங்க் மற்றும் கட்டண சேவை வழங்குநர்கள் (PSPகள்) ஒவ்வொரு வாரமும் மொபைல் நம்பர் கேன்ஸில் லிஸ்ட் (MNRL) மற்றும் டிஜிட்டல் இன்டலிஜன்ஸ் தளம் (DIP) மூலம் தங்கள் டேட்டாவை புதுப்பிக்க வேண்டும். என கூறியுள்ளது மேலும் இதை பற்றிய முழு தகவலல்களை பற்றி பார்க்கலாம் வாங்க
UPI யின் புதிய மாற்றத்திற்க்கு காரணம் என்ன?
ஏப்ரல் 1 முதல், மறுஒதுக்கப்பட்ட அல்லது செயலற்ற மொபைல் எண்கள் இனி UPI சேவைகளைப் பயன்படுத்த முடியாது அதாவது செயலில் இல்லாத மொபைல் நம்பர் அல்லது ஏப்ரில் 1 2025 முதல் புதிய விதியின் படி சில மொபைல் நம்பர்கள் பேங்க் மற்றும் UPI-க்காக வேலை செய்வதை நிறுத்திவிடும் இந்திய நேஷனல் பேமன்ட் கார்பரேசன் NPCI ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது பேங்கில் இனி செயலில் இல்லாத அல்லது வேறொரு நபருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர்களை அகற்றும் இந்த விதி மோசடி மற்றும் தவறான பணம் செலுத்துதல்களை நிறுத்த உதவும்.
புதிய விதிகளின்படி, ஒரு மொபைல் எண் 90 நாட்களுக்குப் பயன்படுத்தப்படாவிட்டால், அதை டெலிகாம் ஆபரேட்டரால் மீண்டும் அகற்ற முடியும். உங்கள் UPI ஐடி இணைப்பு துண்டிக்கப்படலாம், மேலும் நீங்கள் UPI சேவைகளைப் பயன்படுத்த முடியாது.
UPI பயனர்கள் எச்சரிக்கை
- உங்கள் UPI சேவைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க, உங்கள் மொபைல் எண்ணை வங்கியுடன் புதுப்பிக்கவும்.
- சமீபத்தில் எண் மாற்றப்பட்டிருந்தால், புதிய எண்ணை விரைவில் வங்கியில் பதிவு செய்யுங்கள்.
- வங்கியில் பதிவுசெய்யப்பட்ட எண்ணையே தொடர்ந்து பயன்படுத்துங்கள், இதனால் அது செயலிழக்காது, UPI சேவைகள் பாதிக்கப்படாது.
UPI யில் Collect Payment அம்சம் முடிவுக்கு வரும்
அதே போல சமிபத்தில் NPCI அதன் Collect Payments நீக்குகிறது அதாவது இதன் மூலம் மோசடியை கட்டுபடுத்த முடியும் என கூறியது இப்போது இந்த அம்சம் பெரிய மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், அதே நேரத்தில் தனிப்பட்ட பரிவர்த்தனைகளில் “கலெக்ட் ரிக்வெஸ்ட்” லிமிட் ரூ.2,000 ஆக குறைக்கப்படும்.
UPI-ஐ மிகவும் பாதுகாப்பானதாகவும் மோசடி இல்லாததாகவும் மாற்ற இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நீங்கள் UPI-ஐப் பயன்படுத்தினால், உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை விரைவில் புதுப்பிக்கவும், இதனால் உங்கள் பரிவர்த்தனைகளில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.இதயு
இதையும் படிங்க: NPCI New Rule : ஏப்ரல் 1 முதல் இந்த மொபைல் நம்பரில் பேங்க் மற்றும் UPI பணம் ட்ரேன்செக்சன் செய்ய முடியாது காரணம் என்ன
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile