உங்க குடும்பத்துடன் இந்த வாரம் OTT யில் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்

உங்க குடும்பத்துடன் இந்த வாரம் OTT யில் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்

OTT பிளாட்பார்மில் கடந்த சில ஆண்டுகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் சினிமாவின் கருத்தையும் மாற்றியுள்ளன, ஏனெனில் பார்வையாளர்கள் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் மூவீ மற்றும் சீரிஸ் பார்க்கலாம். Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஆன்லைனில் நல்ல திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களுடன் நல்ல கண்டேண்டை வழங்குகிறது மேலும் மக்கள் தங்கள் வீட்டில் அல்லது எங்கு வேண்டுமானாலும் OTT யில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

மேலும் இவை நல்ல குவளிட்டியான படத்தை வழங்குகிறது அந்த வகையில் வர இருக்கும் லோங் வீக் எண்டை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் சரி வாருங்கள் இந்த வார OTT யில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

OTT ரிலிஸ் மூவீகள்

கிடா

கிடா படத்தின் எழுத்து மற்றும் இயக்குனர் ரா, வெங்கட் ஆகும்.ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு கசாப்புக் கடைக்காரன் ஆகிய மூன்று பேரின் கனவுகளை கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது பேரனுக்கு ரூ.2000 விலையில் ஆட்டை வாங்கும் அளவுக்கு பொருளாதார பலம் இல்லாத தாத்தாவைச் சுற்றியே படம் உருவாகிறது., இருப்பினும் அந்த தாத்தா அதிலிருந்து பின்வாங்குவதில்லை அதற்க்கான பணத்தை சேர்த்து வரை
எதையும் நிறுத்த மாட்டார் இந்த கிடா படத்தில் தீசன் மற்றும் ஸ்ரவந்தி ரவி கிஷோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இந்த படம் டிசம்பர் 15 வெளியானது மேலும் இந்த படத்தை ஆஹா டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்த்து மகிழலாம்.

ஜப்பான்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் ஒரு திருட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம்., இந்த திரைப்படம் ஒரு பிரபல திருடன் ஜப்பான் முனி (கார்த்தி) ஒரு நகைக் கடையில் நகைகளில் ஒரு செல்வத்தைத் திருடுவதைச் சுற்றி வருகிறது மேலும் காவல்துறைக்கு நடுவில் எலியும் -பூனையும் போல் இந்த கதை அமைந்திருக்கிறது. இந்த ஜப்பான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் Netflix யில் டிசம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது

ஜிகர்தண்டா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சி இதுவாகும். இந்த படம் ஒரு ஏக்சன், நகைச்சுவை கொண்ட திரைப்படம் ஆகும் மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இந்த படம் டிசம்பர் 8 ஆம் தேதி, வெளியானது மற்றுமிதை நீங்கள் நெட்ஃபிளிக்ஸில் பார்த்து மகிழலாம்.

ரைடு

ரைடு படத்தை அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார், ரெய்டு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் ஆகும், இதில் விக்ரம் பிரபு போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் மேலும் இவரை அடிகடி புது ஊருக்கு மாற்றப்படுவ்வர் இந்த கதையில் இரக்கமற்ற தலைவனைக் கொண்ட ஒரு வலுவான கும்பலை அவர் சமாளிக்க வேண்டும். இந்த கதையில் விக்ரமின் கேரக்டர் இந்த பயங்கரமான கேங்க்ஸ்டரை அடக்கி பயங்கரமான ஆண்ட்சிக்கு முற்று புள்ளி வைப்பதாகும் , மேலும் இப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லியோ

லியோவின் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இந்த படத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய கதாப்பத்ரத்தில் நடித்துள்ளனர், இப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கொண்ட லியோவின் இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவீயாகும் உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டிலிருந்து படத்தைப் பார்க்க ஒரு பெரிய விருந்தாக அமைந்தது.லியோ இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் மற்றும் உலகளவில் நவம்பர் 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது.

கூஸ் முனிசாமி வீரப்பன்

கூஸ் முனிசாமி வீரப்பன் இது ஒரு சீரிஸ் ஆகும் இது ஆறு எபிசோட்கள் கொண்ட உண்மையானவீரப்பனின் கதையை ஆழமாக ஆராய்கிறது மேலும் பார்க்காத நிஜ வாழ்க்கை காட்சிகளையும் கொள்ளைக்காரனின் கதைகளின் பிட்களையும் கொண்டுள்ளது. இந்தத் சீரிஸ் ஷரத் ஜோஷி இயக்குகிறார்.’கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்ற வெப் சீரிஸ் இப்போது Zee 5ல் கிடைக்கிறது., இது டிசம்பர் 14 அன்று வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் 5 அம்சம் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo