வீட்டிலிருந்தபடி இந்த வாரம் OTT யில் வெளிவந்த Movie மற்றும் Web series பார்த்து மகிழலாம்

Updated on 24-Jan-2024
HIGHLIGHTS

மக்கள் பெரும்பாலும் பிசி ஷேட்யுளில் OTT சேவைகளை மிகவும் ஆரம்பித்துள்ளார்கள் தங்கள் வீட்டில் அமர்ந்தபடி திரைப்படம் மற்றும் வெப்சீரஸ் OTT பார்த்து மகிழலாம். இந்த OTT ப்ள்ளட்பர்மில் Amazon Prime Video, Netflix, Aha, Hotstar, SonyLiv, Zee5 போன்றவை இருக்கிறது, இதில் சில OTT ரிலிஸ் ஆவது உண்டு தியேட்டரில் ரிலிஸ் செய்தபிறகு OTTக்கு வருவதும் உண்டு அந்தவகையில் இந்த வாரத்திற்க்கான திரைப்படம் உங்கள் வீட்டில் அமர்ந்தபடி பார்க்க என்ன என்ன இருக்கு என்று பார்க்கலாம் வனாக.

அயலான் (Ayalaan)

அயலான் பொங்கல் அன்று வெளியாகி அமோக வசூலை பெற்றது இதில் சிவகர்த்திகேயன் முக்கிய ரோலில் நடித்துள்ளார், இதை தவிர இதில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் ஆவர் தற்பொழுது இந்த படம் OTT அறிவிப்பு வெளியாகியது இது பிப்ரவரி 16, 2024 அன்று Sun NXT வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சலார் (Salaar)

சலார் திரைப்படம், கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது, இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார், இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி ரூபாய் வரை வசுளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் கேஜிஎஃப் போலவே பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியானது இந்த படம் ஜனவரி 20 அன்று Netflix யில் வெளியாகியது இந்த படம் மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் மட்டுமே ஓடிடியில் வெளியாகியுள்ளது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இந்த படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாகும் இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ் வெங்கட்
இப்படத்தில் ராமதாசன், யாஷிகா ஆனந்த், ஹரிஜா, ரித்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படம் ஜனவரி 19 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

12th Fail

இந்த படம் ஒரு உண்மை கதையாகும் அதாவது ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் வழக்கில் நடைபெற்ற உண்மை சம்பவமாகும் , 12ஆம் வகுப்புத் தேர்வில் பைலகியும் IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கணவு நிஜமந்தை பற்றிய இந்த கதையாகும் இந்த படத்தின் இயக்குனர் விது வினோத் சோப்ரா ஆவர் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி, அன்ஷுமான் புஷ்கர், பிரியன்ஷு சட்டர்ஜி ஆகியோர் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படம் Disney+ Hotstar யில் பார்த்து மகிழலாம்.

Indian Police Force

இது பிரைம் வீடியோவில் கிடைக்கிறது. டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் நடத்தப்படும் தொடர் குண்டுவெடிப்புடன் படம் தொடங்குகிறது. இதற்குப் பிறகு, கபீர் மாலிக் (சித்தார்த் மல்ஹோத்ரா) மற்றும் விக்ரம் (விவேக் ஓபராய்) அடங்கிய இந்த குண்டுவெடிப்புகளைக் கண்டறிந்து நிறுத்த போலீஸ் அதிகாரிகள் குழு நிறுத்தப்படுகிறது, மேலும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஷில்பா ஷெட்டி குந்த்ரா) பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுகிறது. இவர்கள் மூவரும் சேர்ந்து தீவிரவாதிகளை எப்படி அடைகிறார்கள் என்பதுதான் கதை. ஆக்ஷனுடன், தேசபக்தியின் அளவும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காப் பிரபஞ்சத்தில் ரோஹித் ஷெட்டி தயாரித்த முதல் வெப் சீரிஸ் இதுவாகும். இயக்குனர் இவர் இதற்கு முன் சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ், சிம்பா, சூரியவன்ஷி போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:Google Pixel 8 சீரிஸ் மனதை கவரும் நிறத்தில் அறிமுகமாகும்

Kubra

துருக்கிய டிராமா சீரிஸ் ​​குப்ரா நெட்ஃபிக்ஸ் யில் வெளியிடப்பட்டது, இது ஒரு உளவியல் சஸ்பென்ஸ் படமாகும். இது 2020 ஆம் ஆண்டு வெளியான அஃப்சின் கும் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது கோகன் சோஹினோலு என்ற நபரை சித்தரிக்கிறது, அவர் அறியாமல் குப்ரா என்ற இணைய பயனாளரிடமிருந்து ரகசிய செய்திகள், எதிர்கால எச்சரிக்கைகள் போன்றவற்றைப் பெறத் தொடங்குகிறார். ஆன்லைன் நட்பின் போது சஹினோலு இந்த நபரை சந்தித்தார். மெல்ல மெல்ல சஹினோலு அதில் சிக்கிக் கொள்ளத் தொடங்குகிறார். இந்த குழப்பத்தில் இருந்து அவர் எப்படி வெளியேறுகிறார் என்பதுதான் கதை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :