IRCTC ஆப் அல்லது ஆன்லைன் வெப்சைட்டிலிருந்து ரயில் டிக்கெட் புக் செய்கிறிர்கள் என்றால் இது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். தற்பொழுது இந்தியன் ரயில்வே அட்வான்ஸ்ட் ட்ரைன் டிக்கெட் புக்கிங்கின் விதியை மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இப்போது பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக, இந்திய ரயில்வே 120 நாட்களுக்கு முன்னதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை அளித்து வந்த நிலையில், தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி இந்திய ரயில்வேயின் படி நவம்பர் 1, 2024, முதல் தொடங்கும். இந்த புதிய விதி அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு பொருந்தும். அதாவது நீங்கள் அட்வான்ஸ் டிக்கெட் புக் செய்பவர்களாக இருந்தால் இந்த விதியை பற்றி நிச்சயமாக தெரிந்து இருக்க வேண்டும்.
இந்த புதிய விதியானது ஏற்கனவே டிக்கெட் புக் செய்திருந்தால் அதில் ஏதும் பாதிப்பு இருக்காது, இந்த புதிய விதிய கொண்டு வரக்காரணம் அதாவது மூன்று மாதம் முன் டிக்கெட் புக் செய்து காத்து கொண்டிருக்கும் நிலையில் ஏதோ ஒரு காரங்களுக்காக ரயில் கேன்ஸில் ஆவதும் மற்றும் பயணிகள் பல பிரச்சனையை சந்திகிறார்கள் எனவே இந்த புதி கொண்டு வரப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சிறந்த வசதிகளை அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே விரைவாக ஹைடெக் ஆக்கப்பட்டு வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்திய ரயில்வேயால் ரயில்களில் AI சிஸ்டம் பதிக்கப்படுகிறது, இதன் காரணமாக ரயிலில் சீட் கிடைப்பது மற்றும் டிக்கெட் கேன்ஸில் செய்யும் செயல்முறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
AI யின் உதவியுடன், IRCTC ஆப்யில் சீட் எவ்வளவு சதவீதம் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஒதுக்கப்பட்ட சீட்களில் முந்தைய விதியை ரயில்வே மாற்றியுள்ளது. இப்போது AI உதவியுடன், எந்த ஸ்டேஷனில் சீட்களுக்கு அதிக தேவை உள்ளது என்று கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சீட்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கண்பார்ப் செய்யப்பட்ட சீட் பெறுவது எளிதாகியுள்ளது. இது தவிர, இந்திய ரயில்வேயால் AI அடிப்படையிலான கேமராக்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஆன்லைன் பிராட் நடந்தால் இந்த வெப்சைட்டில் புகரளித்தால் உங்க பணம் வாபஸ்