Fastag New Rule: இந்த தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் பெரிய பிரச்சனை

Updated on 01-Aug-2024
HIGHLIGHTS

ஆகஸ்ட் 1, 2024 , FASTag பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட KYC தேவைகளை மையமாக வைத்து புதிய விதிகளை (NPCI) செயல்படுத்தியுள்ளது

FASTag என்பது வண்டிகளுக்கான ப்ரீபெய்ட் டேக் வசதியாகும்,

இது வண்டியை நிறுத்தாமல் இயக்க அனுமதிக்கிறது, டோல்ப்ள்சவில் காத்திருக்கும் தொந்தரவைத் தவிர்க்கிறது

இன்றிலிருந்து அதாவது ஆகஸ்ட் 1, 2024 முதல், FASTag பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட KYC தேவைகளை மையமாக வைத்து புதிய விதிகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) செயல்படுத்தியுள்ளது. FASTag என்பது வண்டிகளுக்கான ப்ரீபெய்ட் டேக் வசதியாகும், இது வண்டியை நிறுத்தாமல் இயக்க அனுமதிக்கிறது, டோல்ப்ள்சவில் காத்திருக்கும் தொந்தரவைத் தவிர்க்கிறது. எலெக்ட்ரோனிக் கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும் FASTag KYC சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FASTag யில் புதிய விதி மாற்றம்

KYC அப்டேட் Fastag பயனர்கள் தங்கள் KYC விவரங்களை அக்டோபர் 31 அன்று அப்டேட் செய்ய வேண்டும், குறிப்பாக அவர்களின் Fastag 3 முதல் 5 ஆண்டு பழமையானதாக இருந்தால் பழைய FASTag மாற்ற அல்லது அப்டேட் செய்ய வேண்டும்.

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக FASTag வைத்திருப்பவர்கள் தங்கள் KYC விவரங்கள் அப்டேட் செய்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கூடுதலாக, டோல் கட்டண நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான FASTagகள் மாற்றப்பட வேண்டும். வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag வெளியீட்டு தேதிகளை சரிபார்த்து உடனடியாக செயல்பட வேண்டும்.

இதில் முக்கியமான விசயங்களை கவனியுங்கள்.

  • முதலில், வாகனத் தகவலைச் சரிபார்த்து புதுப்பிக்கவும்.
  • உங்கள் வண்டியின் தெளிவான முன்புற மற்றும் சைட் போட்டோவை அப்லோட் செய்ய வேண்டும்.
  • மேலும் ஒவ்வொரு FASTag மொபைல் உடன் இணைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

FASTag எப்படி வேலை செய்கிறது ?

FASTag என்பது இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள தடைகளை அகற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான ப்ரீபெய்ட் டேக் வசதியாகும். Fastag செயல்படுத்தப்பட்ட பிறகு, அது வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு, அதன் தகவல் டோல் பிளாசாவில் உள்ள ஆண்டெனாவால் படிக்கப்படுகிறது, அதன் பிறகு Fastag உடன் இணைக்கப்பட்ட பயனரின் பேங்க் அக்கவுன்டிலிருந்து கட்டணத் தொகை கழிக்கப்படும்.

ஏறக்குறைய 98 சதவீதம் கலெக்சன் மற்றும் 8 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன், ஃபாஸ்டாக் நாட்டின் எலக்ட்ரோனிக் கட்டண வசூல் முறையை மாற்றியுள்ளது. இது Fastag உடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாக டோல் செலுத்துவதற்கு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

மேலும் நீங்கள் அக்டோபர் 31, 2024, சரியான நேரத்தில் அப்டேட் செய்தால் இதன் மூலம் பயணிக்கும்போது எந்த ஒரு இடயுறும் இருக்காது.

இதையும் படிங்க: ITR பணம் வந்துள்ளதா ஆன்லைனில் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது ?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :