புதிய Aadhaar app Face id மூலம் டிஜிட்டல் முறையில் UPI போல செயல்படும் இனி பழைய ஆதாருக்கு வேலை இருக்காது

Updated on 09-Apr-2025
HIGHLIGHTS

மத்தியமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் செவ்வாய்கிழமை அன்று FaceID உடன் வரும் புதிய Aadhaar app அறிமுகம் செய்தார்

இந்த Face ID உடன் இது AI உடன் செயல்படும்

இந்த புதிய Aadhaar App டெஸ்டிங்கில் இருக்கிறது

மத்தியமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் செவ்வாய்கிழமை அன்று FaceID உடன் வரும் புதிய Aadhaar app அறிமுகம் செய்தார். இந்த Face ID உடன் இது AI உடன் செயல்படும். மேலும் இதன் X (ட்விட்டர்) போஸ்ட் படி பார்த்தால் தற்பொழுது இந்த புதிய Aadhaar App டெஸ்டிங்கில் இருக்கிறது , இதன் மூலம் எப்பொழுதும் ஆதார் காப்பி வைத்திருக்க தேவை இல்லை இந்த ஆப் இருந்தால் போதும் மேலும் முழுசா பார்க்கலாம் வாங்க.

இந்த புதிய ஆதார் ஆப் விரைவில் அதன் இரு ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS டிவைசிலும் சப்போர்ட் செய்யும், மேலும் ஒரே ஒரு முறை தட்டினால் போதும் தேவையான தகவலை ஷேர் செய்ய முடியும் என மத்தியமைச்சர் எழுத்தி இருந்தார். ஆனால் புதிய ஆதார் ஆப் பீட்டா டெஸ்டிங்கில் இருக்கிறது.

இந்த ஆதார் வெரிபிகேசன் UPI பேமண்ட் போல சுலபமாக இருக்கும், அதாவது பயனர்கள் தேவையான தகவலை டிஜிட்டல் முறையில் அனுப்பலாம் அதே நேரத்தில் இது பிரைவசிக்கு உட்பட்டது என மத்தியமைச்சர் அதில் எழுதி இருந்தார்.

இந்த ஆப் , பல்வேறு துறைகளில் மாதத்திற்கு 150 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ள ஆதார் முக அங்கீகார முறையைப் பயன்படுத்துகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப்யில் QR- அடிப்படையிலான வெரிபிகேசன் அடங்கும், இது QR கோட்களுடன் எளிமைப்படுத்தப்பட்ட UPI பேமன்ட் போன்றது.

அதே போல இந்த புதிய Aadhaar ஆப் டிஜிட்டல் முறையில் செயல்படும் மேலும் இந்த ஆப் 100 சதவிகிதம் பாதுகப்பனது மேலும் நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் ஹோட்டல், கடைகள் போன்ற இடங்களுக்கு ஆதார் போட்டோ காப்பி கொண்டு செல்ல அவசியமில்லை.

இதையும் படிங்க: நீங்க இன்னும் Aadhaar Card-Voter ID லிங்க் செய்யவில்லயே உங்க வீட்டிலிருந்தபடி எப்படி செய்வது பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :