Netflix விலை பாதியாக குறைப்பது, பணம் செலுத்துவதற்குள் இந்த வேலை செய்யுங்கள்.

Netflix  விலை பாதியாக குறைப்பது, பணம் செலுத்துவதற்குள் இந்த வேலை செய்யுங்கள்.
HIGHLIGHTS

Netflix பயனர்களுக்காக நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Netflix இப்போது ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது

தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது.

Netflix தொடர்பாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. குறைந்த விலையில் சந்தாவை விரும்பும் பயனர்களுக்காக நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது திட்டங்களை மாற்றுவதற்கு இதுவே காரணம். இப்போது ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது, அதில் நிறுவனம் 100 நாடுகளில் அதன் சந்தா திட்டத்தின் விலையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்.

தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே பாஸ்வர்டை  பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo