மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூடிய விரைவில் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் பிளாட்போர்மில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி பொலாரிஸ் என அழைக்கப்படும் புதிய மாட்யூலர் சிஸ்டம் விண்டோஸ் கோர் இயங்குதளம் மற்றும் சிஷெல் மூலம் புதிய இயங்கும் புதிய OS வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு முதல் கன்ஸ்யூமர் சார்ந்த லேப்டாப் மற்றும் கம்புயூட்டர் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வழங்கப்டலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு டெக்னோலஜி அம்சங்களுடன் 2-இன்-1 லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.
விண்டோஸ் 10 பொலாரிஸ் முதல் வெர்சன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் உடன் 2019-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த மெமரி அளவு கொண்ட இயங்குதளமாக பொலாரிஸ் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் விண்டோஸ் 10S பிளாட்போர்மில் டெஸ்க்டாப் ப்ரோசரில் இயங்கும் வசதி வழங்கப்படமாட்டாது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலாரிஸ் இயங்குதளம் விண்டோஸ் 32பிட் ப்ரோசெசர் ரிமோட் விர்ச்சுவலைசேஷன் மூலம் இயங்க வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த பொலாரிஸ் இயங்குதளம்.
ARM -சார்ந்த கம்யூட்டர்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொலாரிஸ் இயங்குதளம் வெளியிட அதிகவாய்ப்புகள் உள்ளது. மேலும் கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது பொலாரிஸ்/