Maruti Suzuki கார் ஆரம்ப விலை 746000 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Maruti Suzuki  கார் ஆரம்ப விலை 746000 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS

மாருதி சுஸுகி நிறுவனம் இன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

நிறுவனம் Fronx இன் முன்பதிவை ரூ.11,000 முதல் தொடங்கியுள்ளது.

ronx இன் எஞ்சின் மற்றும் பவர் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.

மாருதி சுஸுகி நிறுவனம் இன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரில் 1.0லி கே-சீரிஸ் டர்போ பூஸ்டர்ஜெட் எஞ்சின் மற்றும் 1.2லி கே-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனம் Fronx இன் முன்பதிவை ரூ.11,000 முதல் தொடங்கியுள்ளது. Fronx இன் எஞ்சின் மற்றும் பவர் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.

Maruti Suzuki Fronx விலை மற்றும் புக்கிங்.

Maruti Suzuki Fronx ஆரம்ப விலை  7,46,000 லிருந்து 9,27,500 ரூபாய் வரை இருக்கிறது. மறுபுறம், Maruti Suzuki Fronx 1.0 லிட்டர் K-Series Turbo Boosterjet பெட்ரோல் இன்ஜின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.72 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் வரை. வாடிக்கையாளர்கள் Fronx ஐ ஆன்லைனில் அல்லது நிறுவனத்தின் Nexa டீலர்ஷிப் மூலமாக வெறும் 11,000 ரூபாய்க்கு பதிவு செய்யலாம். மறுபுறம், Fronx, மாருதி சுசுகி சந்தா மூலம் மாதத்திற்கு ரூ.17,378 சந்தாக் கட்டணத்தில் வாங்கலாம்.

Maruti Suzuki Fronx யின் இன்ஜன் மற்றும் பவர்.

இன்ஜின் மற்றும் பவரை பற்றி பேசினால், Maruti Suzuki Fronx யில் புதிய  1.0 லிட்டர் K-சீரிஸ் டர்போ பூஸ்ட்ரெஜெட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 99 ஹெச்பி பவரையும், 147 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இது தவிர, 1.2 லிட்டர் கே-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது, இது ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 89 ஹெச்பி ஆற்றலையும் 113 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பத்தைப் பற்றி பேசுகையில், இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு ஏஜிஎஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி உள்ளது.

Maruti Suzuki Fronx சேஃப்டி அம்சம்.

சேஃப்டி அம்சம் பற்றி பேசினால் Maruti Suzuki Fronx யின்  Suzuki HEARTECT பிளாட்பார்மில் தயார் செய்கிறது.Fronx 6 ஏர்பேக்குகள், மூன்று புள்ளி ELR சீட்பெல்ட்கள், ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரோல்ஓவர் மிட்டிகேஷன், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், EBD மற்றும் ISOFIX சைல்டு சீட் ஏங்கரேஜ்கள் உள்ளன. Maruti Suzuki Fronx ஆனது Sigma, Delta, Delta+, Zeta மற்றும் Alpha ஆகிய ஐந்து வகைகளில் கிடைக்கிறது.

கலர் ஆப்ஷனை பற்றி பேசினால் Fronx காம்பேக்ட் SUV 10 மேனோமீட்டர் மற்றும் டுயல் டோனில் கிடைக்கிறது.7 மோனோமீட்டரின் நிறம் rctic White, Splendid Silver, Grandeur Grey, Bluish Black, Celestial Blue, Opulent Red மற்றும் Earthen Brown அடங்கியுள்ளது, அதுவே டூயல் டோன் கலரில் Bluish Black Roof உடன் Splendid Silver, Bluish Black Roof உடன்  Opulent Red மற்றும் Bluish Black Roof உடன் Earthen Brown அடங்கியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo