Mahindra XUV300 புதிய என்ஜின்களுடன் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம்.

Mahindra XUV300 புதிய என்ஜின்களுடன் அப்டேட்  செய்யப்பட்டு அறிமுகம்.
HIGHLIGHTS

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV300 மாடலை புதிய என்ஜின்களுடன் அப்டேட் செய்தது.

UV300 மாடல் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது

XUV300 பிஎஸ்6 2 விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV300 மாடலை புதிய என்ஜின்களுடன் அப்டேட் செய்தது. அந்த வகையில், XUV300 மாடல் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து மஹிந்திரா நிறுவனம் XUV300 பிஎஸ்6 2 விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகரித்து இருக்கிறது.

அதன்படி மஹிந்திரா XUV300 பிஎஸ்6 2 விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மஹிந்திரா XUV300 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மஹிந்திரா XUV300 பெட்ரோல் AMT வேரியண்ட் W6 விலை தற்போது ரூ. 20 ஆயிரம் அதிகரித்து ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் என மாறி இருக்கிறது. பெட்ரோல் என்ஜின் கொண்ட மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட W4, W6 மற்றும் W8 வேரியண்ட்களின் விலை ரூ. 20 ஆயிரம் உயர்ந்துள்ளது. W8(O) விலை ரூ. 22 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.

டீசல் என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 1, 2023 முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வருகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo