இந்தியாவில் அறிமுகமான குறைந்த விலை டேப்லெட் Milkyway அறிமுகம் BharatGPT AI சப்போர்ட் இருக்கும்

Updated on 16-Feb-2024
HIGHLIGHTS

எபிக் ஃபவுண்டேஷன் ஆண்ட்ராய்டு டேப்லெட் Milkyway அறிமுகப்படுத்தியுள்ளது

இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் டேப்லெட்டாகும்

BharatGPT AI அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது

எபிக் ஃபவுண்டேஷன் ஆண்ட்ராய்டு டேப்லெட் Milkyway அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் டேப்லெட்டாகும். BharatGPT AI அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். கல்வித்துறையை மனதில் வைத்து இந்த டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டேப்லெட்டில் 8 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek சிப்செட் உடன் வருகிறது. சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. அதைப் பற்றிய மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

HCL இணை நிறுவனர்களான டாக்டர் அஜய் சௌத்ரி மற்றும் அர்ஜுன் மல்ஹோத்ரா தலைமையிலான லாப நோக்கற்ற அமைப்பான EPIC அறக்கட்டளை, இந்தியாவில் அதன் முதல் டேப்லெட் மில்கிவேயை அறிமுகப்படுத்தியுள்ளது. CNBCTV18 யின் படி, டேப்லெட்டை VVDN டெக்னாலஜிஸ், மீடியாடெக் இந்தியா மற்றும் CoRover.ai உருவாக்கியது. இது ஒரு கூட்டு முயற்சி.

பழுதுபார்க்கக்கூடிய மற்றும் மேம்படுத்தக்கூடிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த டேப்லெட் தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்தின் நோக்கத்துடன் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் அத்தகைய கூறுகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன அவை எளிதாக மாற்றப்படலாம் மற்றும் மேம்படுத்தப்படலாம். BharatGPT வெர்ஜுவல் அசிஸ்டன்ட் சப்போர்ட் இதில் வழங்கப்படுகிறது. அதனால் டிஜிட்டல் கற்றல் ஊக்குவிக்கப்படும், மேலும் பல்வேறு மொழிகளுக்கான சப்[ஓர்ட் கிடைக்கும்.

Milkyway Tablet சிறப்பம்சம்

Milkyway யில் 8 இன்சின் IPS டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை ரீப்ளேஸ் செய்து கொள்ள முடியும்., இதன் ரேசளுசன் 800×1280 பிக்சல் இருக்கிறது முன்பக்கத்தில் 3 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதேசமயம் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் மற்ற விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இது MediaTek 8766A செயலியைக் கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வழங்கப்படுகிறது. ஸ்டோரேஜை விரிவுபடுத்தலாம். இந்த டேப்லெட் Android 13 OS யில் இயங்குகிறது.

இதையும் படிங்க:வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்

Milkyway டேப்லெட்டில் 5100 mAh பேட்டரி இருக்கிறது இதை நீங்கள் மாற்றிகொள்ளலாம் இது 4G LTE மற்றும் புளூடூத் 5.0 கனேக்டிவிட்டிகாக சப்போர்டுடன் வருகிறது.

#Milkyway Tablet

Milkyway Tablet Price

கல்வி நிறுவனங்களில் டேப்லெட் யின் டிச்ற்றிப்யுசன் IRIS செய்யும் அதன் தலைவர் சஞ்சீவ் கிருஷ்ணன் கூறுகையில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த டேப்லெட் சந்தையில் கிடைக்கும். இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த டேப்லெட்டின் விலை சுமார் ரூ.8,400 இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :