தொடர்ந்து வரும் விலை உயர்வால் மக்கள் பல மடங்கு பதித்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து தற்பொழுது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை (எல்பிஜி விலை) 200 ரூபாய் வரை அரசு குறைத்துள்ளது. வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு இந்த சப்சிடி வழங்கப்படும்,, ஆகஸ்ட் முதல் தேதி, பெட்ரோலிய நிறுவனங்கள் வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் விலையை 100 ரூபாய் குறைக்கப்பட்டது
ஆகஸ்ட் முதல் தேதி, தலைநகர் டெல்லியில் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1103 ஆக இருந்தது. அதே நேரத்தில் மும்பையில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1102.50, ஆகும் கொல்கத்தாவில் ரூ.1129, சென்னையில் ரூ.1118.50. பெட்ரோலிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எல்பிஜி விலையை மாற்றுகின்றன
உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 கோடி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் கெஸ் சிலிண்டர் இணைப்புகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சமையல் கெஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,053 ஆகவும், மும்பையில் ரூ.1,052.50 ஆகவும், சென்னையில் ரூ.1,068.50, கொல்கத்தாவில் 1,079 ரூபாயகவும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் என்ன விலை? இந்த விலை குறைப்பின் மூலம் தற்போது தமிழகத்தில் ரூ.1118க்கு விற்கப்படும் கெஸ் சிலிண்டர், இனி ரூ.918 ஆக குறைய உள்ளது.
https://twitter.com/ANI/status/1696470179742663154?ref_src=twsrc%5Etfw
இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு இணைப்புக்கு ரூ.1,600 ஆதரவுடன் ஐந்து கோடி LPG இணைப்புகளை பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள) குடும்பங்களுக்கு வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ், LPG இணைப்புகளுக்கு அரசாங்கம் 1.6 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்தது, மேலும் இது புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் இதே போன்ற பலன்களை வழங்கியது.
இதனி தொடர்ந்து மத்திய அமைச்சர்அனுராக் தாக்கூர் என்ன கூறினார் என்றால், அனைத்து பயனர்களுக்கும் பிரதமர் மோடி சமையல் கேஸ் சிலிண்டர் இது ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக ரூ.200 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.