மீண்டும் ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலன் மாஸ்க் பறவை லோகோ திரும்பி வந்தது.

Updated on 07-Apr-2023
HIGHLIGHTS

டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது

3 நாட்களுக்கு முன்பு, மஸ்க் ட்விட்டர் லோகோவை Dogecoin லோகோவாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்

டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை

டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது. அனைவருக்கும் நன்கு பழகிப் போன டுவிட்டர் லோகோ டாகி-காயின், அதாவது ஷிபா இனு லோகோ-வாக மாற்றப்பட்டது. தற்போது டாகி-காயினுக்கு பதில் மீண்டும் பழையபடி நீலப் பறவை லோகோ மாற்றப்பட்டுவிட்டது. அடிக்கடி டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஏறக்குறைய 3 நாட்களுக்கு முன்பு, மஸ்க் ட்விட்டர் லோகோவை Dogecoin லோகோவாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மஸ்க் எப்பொழுதும் செய்வது போல், டோஜ் லோகோ சில மணிநேரங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம் ஆனால் அது நடக்கவில்லை., லோகோ சுமார் 3 நாட்கள் தங்கியிருந்தது. அதாவது, எந்த CEO அதை செய்கிறார்? அதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை,  ட்விட்டர் லோகோ வெப் வெர்சனில் மட்டும் Doge என மாற்றப்பட்டது மற்றும் டுவிட்டர் மொபைல் வெர்ஷனில் நீலப் பறவை லோகோ மாற்றப்படாமலேயே இருந்த

டாகி-காயின் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-கிற்கு எதிரான வழக்கு தொடர்ந்ததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. முட்டாள்கள் தினத்தை ஒட்டி எலான் மஸ்க் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணமாக இருந்த போதிலும், டுவிட்டர் தளத்தில் தற்போது மீண்டும் நீலப் பறவை லோகோ வழங்கப்பட்டு விட்டது. டுவிட்டரை ரிலோட் செய்யும் போது பழையபடி நீலப் பறவை லோகோ ஸ்க்ரீனில் தோன்றுகிறது.

டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தற்போது அதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :