LG எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் அல்ட்ராகியர் கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மானிட்டரில் அல்ட்ராவைடு 21:9 ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும். முன்னதாக இந்த மானிட்டர் 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அல்ட்ராகியார் ஃபிளாக்ஷிப் மாடல் – 34GK950G நானோ ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் வருவதால், DCI-P3 கலர் ஸ்பேசில் 98 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளும். இத்துடன் NVIDIA G-SyncTM கிராஃபிக் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால், கேமிங்கின் போதும் சீராக இயங்கும்.
இந்த மானிட்டர் 34-இன்ச் டிஸ்ப்ளே, அல்ட்ராவைடு QHD 3440×1440 இமேஜ் ரென்டரிங் கொண்டுள்ளது. இதனால் கேமர்கள் தங்களுக்கான பிரத்யேக ஆம்பியன்ஸ் உருவாக்கிக் கொள்ள முிடயும். இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்பியர் லைட்டிங் ஆறு வெவ்வேறு நிறங்களுக்கான செட்டிங்களை கொண்டுள்ளது.