8 நாட்கள் பேட்டரி பேக்கப் நீடிக்க கூடிய வாட்டர் ரெசிஸ்டன்ட் ஸ்மார்ட்பேன்ட் அறிமுகம்..!

8 நாட்கள் பேட்டரி பேக்கப் நீடிக்க கூடிய வாட்டர் ரெசிஸ்டன்ட் ஸ்மார்ட்பேன்ட் அறிமுகம்..!
HIGHLIGHTS

லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் லெனோவோ நிறுவனத்தின் HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் OLED மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதில் இதய துடிப்பு சென்சார் வழங்கப்படாத நிலையில், 60 mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது . 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய HX06, பில்ட்-இன் ஸ்டான்டர்டு USB போர்ட் கொண்டிருக்கிறது. 

இதை கொண்டு நேரடியாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கேபிள்களும் தேவைப்படாது.

லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:

– 0.87 இன்ச் 128×32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
– ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
– அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
– இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
– கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
– வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
– எடை: 20 கிராம்
– ப்ளூடூத் 4.2 LE
– ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
– ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
– 60 எம்ஏஹெச் பேட்டரி

லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo