கியா இந்தியா நிறுவனம் EV9 கான்செப்ட் எஸ்யுவி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

கியா இந்தியா நிறுவனம் EV9 கான்செப்ட் எஸ்யுவி  எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
HIGHLIGHTS

கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது

2024 இறுதியில் கியா EV9 கான்செப்ட் உற்பத்தி பணிகள் துவங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கியா EV9 கான்செப்ட் முதன் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது

கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. முற்றிலும் புதிய கியா கார்னிவல் மாடலுடன் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2024 இறுதியில் கியா EV9 கான்செப்ட் உற்பத்தி பணிகள் துவங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக 2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் கியா EV9 கான்செப்ட் முதன் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கியா பிராண்டின் E-GMP பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த தோற்றம் பிரமாண்டமாக காட்சியளிக்கும் போதிலும், இதன் டிசைன் ஏரோடைனமிக் அம்சங்களை கொண்டிருக்கிறது.

கியா நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களின் படி EV9 கான்செப்ட் மாடல் ப்ரோடக்ஷன் நிலைக்கு தயாராக இருப்பதாகவே தெரிவித்து இருந்தது. இதில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதனுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும் என கூறப்படுகிறது.

வெளிப்புறம் இந்த காரில் கிளாம்ஷெல் பொனெட், பிலான்க்டு-ஆஃப் டைகர் நோஸ் கிரில், டாட் பேட்டன் ஹெட்லேம்ப்கள், L வடிவ டிஆர்எல்-கள், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பொனெட்டில் ஸ்டிராங் கிரீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் லைன் மிக தெளிவாக காட்சியளிக்கிறது. கான்செப்ட் மாடல் என்பதால், இதன் பக்கவாட்டில் டோர் ஹேண்டில்கள் காணப்படவில்லை.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் தடிமனான வீல் ஆர்ச்கள், ஏரோடைனமிக் டிசைன் கொண்ட பெரிய வீல்கள், வழக்கமான ORVM-களுக்கு மாற்றாக கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் நேரான ரூஃப் லைன் இண்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலருடன் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் குவார்டர் கிளாஸ் மற்றும் விண்ட்ஷீல்டு உள்ளிட்டவை அளவில் பெரியதாக இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo