மோசடி திருட்டு கேரளா பெண்ணிடமிருந்து ரூ.12 லட்சம் பணம் அபேஸ்

மோசடி திருட்டு கேரளா பெண்ணிடமிருந்து ரூ.12 லட்சம் பணம் அபேஸ்
HIGHLIGHTS

மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி அவர்களின் பேங்க் அக்கவுன்ட்களில் இருந்து பணத்தை திருட

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி ரூ.12 லட்சத்தை இழந்தார்

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, அந்தப் பெண்ணுக்கு ஒரு போன் கால் வந்தது,

மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி அவர்களின் பேங்க் அக்கவுன்ட்களில் இருந்து பணத்தை திருட புதிய தந்திரங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இன்று பரவும் பொதுவான மோசடிகளில் ஒன்று சுங்க மோசடி. இந்தத் திட்டத்தில், மோசடி செய்பவர்கள் சுங்க அதிகாரிகளைப் போல் நடித்து, சுங்கச் சாவடியில் சிக்கியுள்ள மோசடிப் பேக்கேஜ்களுக்கு பணம் கேட்கின்றனர்.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி ரூ.12 லட்சத்தை இழந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, அந்தப் பெண்ணுக்கு ஒரு போன கால் வந்தது, அதில் காலர் அந்தப் பெண்ணுக்கான பரிசுக்காக சுங்க வரி என்ற பெயரில் ரூ. 15,000 கேட்கிறார். அந்தப் பெண் ஏற்கனவே பரிசை எதிர்பார்த்திருந்ததால், அவரை உண்மையான சுங்க அதிகாரி என்று தவறாக நினைத்து பணம் செலுத்தினார்.

இருப்பினும் அந்த பேக்கில் 10 ரூபா டொலர்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் காணப்படுவதாக கூறி மோசடி செய்பவரின் கோரிக்கைகள் அதிகரித்தன. மோசடி செய்பவரின் அறிவுறுத்தலின் படி பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்தி வந்தார். ஒரு நண்பர் அவளை எச்சரித்தபோது இது ஒரு மோசடி என்பதை அவள் உணர்ந்தாள்.

கஸ்டம்ஸ் ஸ்கேம் எப்படி வேலை செய்யும்?

அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்புத் துறையான ‘PIB Fast Check’ சமீபத்தில் X மூலம் சுங்க மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கியது.

PIB Fact Check கீழே பகிர்ந்தது படி இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவருக்கு இந்திய சுங்கத் துறையிலிருந்து கால் வருகிறது. பார்சலில் சிக்கல் இருப்பதாக முன் பதிவு செய்யப்பட்ட மேசெசுடன் கால் தொடங்குகிறது. மேலும் தகவல் அல்ல து மெசஜ் மூலம் உதவி பெற 9ஐ அழுத்துமாறு பயனரைக் கேட்கிறது.

இதேபோல் பல வழிகளிலும் மக்களை ஏமாற்றி பல லட்சம், கோடி ரூபாய் கொள்ளையடித்து வருகின்றனர். கஸ்டம்ஸ் மோசடி தவிர, ஐடிஆர் பணத்தைத் திரும்பப்பெறும் மோசடி, ஃபேஸ்புக் தொடர்பான முதலீட்டு மோசடி, சிபிஐ மோசடி என பல வகையான மோசடிகள் நாளுக்கு நாள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இருப்பினும், இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளும் உள்ளன, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீங்கள் இது போன்ற மோசடியிலிருந்து எப்படி தப்பிப்பது ?

சுங்க மோசடி வலையில் சிக்காமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, முதலில் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதேனும் கூரியர் அனுப்பியுள்ளீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த அழைப்பைப் புறக்கணிக்கவும். CBIC இணையதளத்தில் DIN ஐப் பயன்படுத்தி இந்திய சுங்கத்திலிருந்து எந்தத் தகவல்தொடர்பையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட அறியப்படாத இணைப்புகள் எவ்வளவு உண்மையானதாகத் தோன்றினாலும் அவற்றைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் தனிப்பட்ட தகவலை ஃபோனில் ஒருபோதும் பகிர வேண்டாம், ஏனெனில் மோசடி செய்பவர்கள் பின்னர் உங்களை ஏமாற்றுவதற்கு அதைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் உங்கள் உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் துறைக்கு தெரிவிக்கவும்.

இதையும் படிங்க Realme 13 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்பே தகவல் வெளியானது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo