JioTag Go இந்தியாவில் ரூ,1,499அறிமுகம் தொலைந்ததை ஒரு நொடியில் கண்டு பிடிக்கலாம்

Updated on 19-Dec-2024
HIGHLIGHTS

JioTag Go காம்பேக்ட் ப்ளூடூத் ட்ரேக்கர் இந்தியாவில் அறிமுகம்

இந்த புதிய ட்ரேக்கர் Android 9 உடன் கம்பிடபில் ஆக இருக்கிறது

இது ட்ரெக்கிங்க்கு Google Find My Device நெட்வர்க் பயன்படுத்துகிறது.

JioTag Go காம்பேக்ட் ப்ளூடூத் ட்ரேக்கர் இந்தியாவில் அறிமுகம், இதன் இடை வெறும் 9 கிராம் மட்டுமே இந்த புதிய ட்ரேக்கர் Android 9 உடன் கம்பிடபில் ஆக இருக்கிறது, மேலும் இது ட்ரெக்கிங்க்கு Google Find My Device நெட்வர்க் பயன்படுத்துகிறது.

இது புளூடூத் 5.3 கனேக்சனை சப்போர்ட் செய்கிறது மற்றும் சிம் கார்டு இல்லாமல் வேலை செய்கிறது. மேலும் இந்த டிவாஸ் CR2032 பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு வருட ஆயுட்காலம் கொண்டதாகக் கூறப்படுகிறது. பயனர்கள் அவற்றைக் கண்காணிக்க கீஸ் , சாமான்கள் அல்லது கேஜெட்டுகள் போன்ற தங்கள் பொருட்களில் சேர்க்கலாம். JioTag Go, JioTag Air போலல்லாமல் , iPhoneகளுடன் பயன்படுத்த முடியாது.

JioTag Go விலை

இந்தியாவில் JioTag Go விலை ரூ.1,499. அமேசான், ஜியோமார்ட் இ-ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்களில் இதை வாங்கலாம் . ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு கலர்களில் இந்த டிராக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

JioTag Go சிறப்பம்சம்.

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முதல் முறையாக அதன் ப்ளூடூத் ட்ரேக்கர் JioTag Go அறிமுகம் செய்துள்ளது, இது Android 9 அல்லது அதற்க்கும் உயர்தரப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இணைக்க முடியும், இருப்பினும், அதன் பெரிய சகோதரர் ஜியோடேக் ஏர் போலல்லாமல், இது ஐபோன்களுடன் கம்படபிலாக இருக்காது. டிராக்கரை கீஸ், பர்ஸ், லக்கேஜ், கேஜெட்டுகள், பைக் போன்றவற்றுடன் இணைக்கலாம், இது தொலைந்து போனால் இந்த பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும்.

புளூடூத் ரேஞ்சிற்கு, ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்ஸில் உள்ள பீப் ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்து பொருட்களை எளிதாகக் கண்டறியலாம், அதன் பிறகு டிராக்கர் பீப் சவுண்டை வெளியிடத் தொடங்கும். புளூடூத் ரேஞ்சிற்கு வெளியே அதன் கடைசி லோக்கேசனை கண்டறிய Find My Device நெட்வொர்க்கைப் பயன்படுத்தலாம். இந்த ரேஞ்சில் ஒருமுறை, மேலும் கண்காணிப்பதற்காக தானாகவே மீண்டும் இணைகிறது.

jiotag-go-1

JioTag Go யில் ப்ளுடூத் 5.3 கனெக்டிவிட்டி இருக்கிறது, இதற்காக சிம் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை மற்றும் இது CR2032 பேட்டரியில் வேலை செய்கிறது. நிறுவனத்தின் படி, இந்த ட்ரேக்கரின் ஒரு வருடம் வரை இயங்கும் இது 38.2 x 38.2 x 7.2 mmமற்றும் 9 கிராம் எடை உள்ளது

இதையும் படிங்க: OnePlus 13 சீரிஸ் அறிமுக தேதி நேரம் அனைத்தும் அம்பலமாகியது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :