PSLV-C42 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் எய்தது…!

PSLV-C42  ராக்கெட்டை  வெற்றிகரமாக விண்ணில் எய்தது…!
HIGHLIGHTS

கடின உழைப்பால் உள்நாட்டு தொழில் நுட்பம் வெற்றியால், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

PSLV-C42  ராக்கெட் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைகோள்கையும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் இஸ்ரோ சார்பில் அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோவின் செயற்கைகோள் ஏவும் திட்டம் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. இதனுடன் டிஜிட்டல் இந்தியாவுக்கு உதவும் திட்டமும் தயாராகியுள்ளது.

https://static.digit.in/default/8bd3ffee9f4eb40bc5327a2328215d42b4e73e96.jpeg

இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவசர் மற்றும் S 1-4 ஆகிய செயற்கைகோள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், S1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சூற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை உள்ளிட்டவைகளை கண்ணாகிக்க உதவும். 

பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17 நிமிடத்தில் இரண்டு செயற்கை கோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44வது PSLV ராக்கெட் ஆகும். 

இதை முதல் முதலில் கமர்ஷியலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.  அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள் விண்ணிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தற்போது PSLV  C 42 ராக்கெட்டால் ஏவப்பட்ட இரண்டு செயற்கை கோள்கள் மூலம் நிலபரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு கடல் வாழ்வழி போக்குவரத்து உள்ளிட்டவைகளை கண்காணிக்கும். செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கு எளிமையான ராக்கெட் பிஎஸ்எல்வி ஆகும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். 

PSLV  ராக்கெட் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார். கடின உழைப்பால் உள்நாட்டு தொழில் நுட்பம் வெற்றியால், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo