IRCTC மற்றும் Zomato உடன் கூட்டு இனி உங்க சீட்டுக்கே பிடித்த சாப்பாடு வரும்
(IRCTC) Zomato நிறுவனத்துடன் இணைந்து, ரயில்களில் உள்ள இருக்கைகளில் பயணிகளுக்கு முன்கூட்டிய உணவை வழங்க உள்ளது
இந்த கூட்டு என்பது ஒரு ப்ரொஜெக்ட் திட்டமாகும்
RCTC இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) Zomato நிறுவனத்துடன் இணைந்து, ரயில்களில் உள்ள இருக்கைகளில் பயணிகளுக்கு முன்கூட்டிய உணவை வழங்க உள்ளது. இந்த கூட்டு என்பது ஒரு ப்ரொஜெக்ட் திட்டமாகும், இது தற்போது புது டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம்.
IRCTC உடன் கைகோர்த்த Zomato
ஐஆர்சிடிசி ஏற்கனவே Dominos, Zoop, Comesum, Behrouz உள்ளிட்ட பல உணவுப் பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இப்போது, பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவை Zomato வழியாக தங்கள் இருக்கைகளுக்கு டெலிவரி செய்யலாம். ஒரு அறிக்கையின்படி, இந்த கூட்டாண்மை மூலம், ரயில் பயணிகள் இப்போது தேர்வு செய்ய பரந்த ரேஞ்சை பெறுவார்கள்.
நாம் குறிப்பிட்டுள்ளபடி, ஐஆர்சிடிசி தற்போது ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் (POC) தொடங்கியுள்ளது. இந்த ஐந்து ரயில் நிலையங்கள் புது டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகும். இந்த POC யின் கீழ், பயணிகள் ப்ரீ -ஆர்டர் செய்த உணவை Zomato உதவியுடன் ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் போர்டல் மூலம் தங்கள் இருக்கைகளுக்கு டெலிவரி செய்யலாம்.
இந்த செய்தி வெளியான பிறகு, Zomato பங்கு விலை 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.115ஐ எட்டியது.
இதையும் படிங்க: Airtel World Cup திட்டம் 84 வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் ரயில்வே கேட்டரிங் சேவையும் அதன் பயணிகளுக்கான சிறப்பு சேவைகளையும் சலுகைகளையும் தொடங்கியுள்ளது. ஐஆர்சிடிசி யின் கேட்டரிங் கிளையும் உண்ணாவிரதப் பயணிகளின் சிறப்புக் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நவராத்திரி தாலிகளை அறிவித்திருந்தது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile