குழந்தையை திருடினா இனி இந்த நவீன டேக் மூலம் வசமா மாட்டிப்பிங்க…!

Updated on 06-Aug-2018
HIGHLIGHTS

குழந்தைகளின் திருட்டு மருத்துவமனைகளில் அடிக்கடி இது போல பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு குழந்தைகளின் கால்களில் RFID எனப்படும் Radio Frequency Identification Tag கட்டிவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தைகளின் திருட்டு மருத்துவமனைகளில் அடிக்கடி இது போல பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு குழந்தைகளின் கால்களில் RFID எனப்படும் Radio Frequency Identification Tag கட்டிவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று அந்த குழந்தையின் தாயுக்கும் இதே போன்ற RFID கயிறு கட்டிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவிடம் இருந்து குழந்தையை தள்ளி எடுத்து சென்றால் அந்த டாக் மூலம் அலாரம் சத்தம் கேட்கும் என்றும், இதன் மூலமாக குழந்தை கடத்தலை தடுக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

மருத்துவமனையின் அருகில் இருக்கும் Radio Frequency ரீடர் குழந்தையின் கால்களில் உள்ள கயிற்றிலிருந்து வரும் அலைகளை கண்டறிந்து குழந்தை வெளியே எடுத்து செல்லப்பட்டால் அலாரம் சத்தம் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1844ம் ஆண்டு முதல் இயங்கி வரும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் 175 ஆண்டு விழாவையொட்டி இந்த புதிய வசதி அறிமுகப்படுத்த மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :