காதலர் தினத்தில் கவிதையாக love letter எழுத உதவுகிறது ChatGPT

Updated on 13-Feb-2023
HIGHLIGHTS

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் OpenAI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் AI சாட் பாக்ஸான ChatGPT ஐ வெளியிட்டது.

McAfee நிறுவனம், 'மாடர்ன் லவ்' என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில் உள்ள 5,000 பேரிடம் ஒரு புதுவித ஆய்வை நடத்தியது

பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர், ChatGPTஐப் பயன்படுத்தி காதல் கடிதங்கள் எழுதத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு பலர் தங்கள் காதலன், காதலிக்கு வித விதமாக கவிதை எழுதிக்கொடுக்க வேண்டும்   என்ற ஆசை இருக்கும் ஆனால் என்ன எழுதுவது  எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் இருக்கும்  AI டூல்  ChatGPT உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது. ChatGPTயின் வருகையால் கூகுளின் எதிர்காலத்தில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ChatGPT ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நொடிகளில் பதிலளிக்கலாம் மற்றும் உங்களுக்காக கடிதம்  எழுதலாம் சமீபத்திய ஆய்வில், 62% இந்தியர்கள் காதல் கடிதங்கள் எழுதுவதற்கு ChatGPT ஐ பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடிதங்கள் எழுதும் காலத்தில் இருந்தே தானாக காதலிக்கு கடிதம் எழுதுபவரை விட நண்பர்கள் உதவியோடு எழுதுபவர்கள் தான் அதிகம். இன்னும் ஒரு சிலர் நன்றாக கவிதை எழுதுபவரிடம் இருந்து 1 கவிதையை கடன் வாங்கி அப்படியே காதலியிடம்  ஒப்பித்துவிடுவார். ஆனால் காலம் மாற மாற டெக்னாலஜியை துணைக்கு அழைத்து அங்கு இருந்து கொஞ்சம் பிட் அடித்து பாஸ் ஆகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் OpenAI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் AI சாட் பாக்ஸான ChatGPT ஐ வெளியிட்டது. பலதரப்பட்ட கேள்விகளை கலந்து கேட்டாலும் அதற்கு தெளிவாக ஒரு பதில் தந்து இணையவாசிகளை குதூகலப்படுத்தி வருகிறது இந்த ChatFGPT. மருத்துவ பரீட்சையில் தேர்ச்சி பெறுவது முதல் புதிய சமையல் குறிப்புகள் வரை அனைத்தையும் சொல்லும் இதை காதலுக்கு உதவ அழைக்காமலா இருக்கப் போகிறார்கள்.

சமீபத்தில் McAfee நிறுவனம், 'மாடர்ன் லவ்' என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில் உள்ள 5,000 பேரிடம் ஒரு புதுவித ஆய்வை நடத்தியது. அதில் AI மற்றும் இணையம் எப்படி தங்களது காதலை வெளிப்படுத்த உதவுகிறது என்ற கேள்விக்கு கருத்து கேட்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர், ChatGPTஐப் பயன்படுத்தி காதல் கடிதங்கள் எழுதத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதிலும் இந்திய ஆண்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது.

27 சதவீதம் பேர் ChatGPTயில் இருந்து உதவி பெறுவது கடிதம் அனுப்புவோருக்கு அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக காரணம் கூறியுள்ளனர். 21 சதவீதம் பேர் நேரமின்மையால் அதை பயன்படுத்துவதாகவும், 21 சதவீதம் பேர் கடிதம் எழுதுவதற்கான உத்வேகமின்மை இருக்கிறது ஆனால் காதலை அழகாக வெளிப்படுத்த ஆசை இருப்பதால் ChatGPTயைப் பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 49 சதவீதம் பேர் ChatGPT-எழுதிய கடிதங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் கோரியுள்ளனர்

ஆனால் இந்த ஆண்டில் காதலர்களுக்குள் பகிரப்படும் கடிதங்களில் அதிகம் செயற்கை நுண்ணறிவால் எழுதப்பட்டதாக தான் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :