Hyundai Verna புக்கிங்கில் அசுர சாதனை, சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hyundai  Verna  புக்கிங்கில் அசுர சாதனை, சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது.

2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 2023 ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக கடந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி புதிய ஹூண்டாய் காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

இதில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது.

2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo