ஆன்லைன் மற்றும் சைபர் பிராட் அதி வேகமாக பரவி வருகிறது, வரும் நாட்களில் பல புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சைபர் குற்றவாளிகள் அரசு அதிகாரிகளாக காட்டிக்கொண்டு, பாதிக்கப்பட்ட நபரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி லட்சக்கணக்கான ரூபாய்களை ஆன்லைனில் பறிக்கின்றனர்.படித்தவர்கள் கூட டிஜிட்டல் கைதாகி சைபர் மோசடிக்கு ஆளாகி வருவது கண்கூடு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அத்தகைய ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவர் 5 லட்சத்திற்கும் அதிகமான தொகையை திரும்பப் பெற்றார்.
தகவல்களின்படி, நொய்டா சைபர் செல் பொலிசாரின் உடனடி நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒருவர் அவரிடம் இருந்து மோசடி செய்த பணத்தை 12 நாட்களில் அவரது கணக்கில் திரும்பப் பெற்றுள்ளார். தகவலின்படி, ஆகஸ்ட் 23 அன்று, பணமோசடி என்ற பொய் வழக்கில் சிக்கிய பின்னர் பாதிக்கப்பட்டவர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 27 அன்று, சைபர் குண்டர்கள் பாதிக்கப்பட்டவரின் அக்கவுண்டில் இருந்து ரூ.5.20 லட்சத்தை மாற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டலில் (NCRP) புகார் அளித்தார். சைபர் கிரைம் டீம் பணம் மாற்றப்பட்ட அக்கவுண்டை முடக்கியது. இதற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் 12 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் பெற்றார்.
சைபர் பிராட் ஆன்லைனில் புகரளிப்பது மிக எளிதாகும் https://cybercrime.gov.in/ போர்டலில் சென்று புகரளிக்கலாம். நீங்கள் முதல் முறையாக புகரளிக்கிறிர்கள் என்றால் இங்கு ஒரு சில தேவையான தகவல் மொபைல் நம்பர், ஈமெயில்,போன்றவை தேவைப்படும் மேலும் நீங்கள் அந்த போர்டலில் மூலம் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் புகரளிக்கலாம்.
இதையும் படிங்க:Android 15 அறிமுகமானது இனி யாராலும் போனை திருட முடியாது