உங்கள் ஆதார் எண்ணுடன் தவறான மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் இணைக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், ஆதார் தொடர்பான அனைத்து தகவல்களும் தவறான கைகளுக்குச் சென்றுவிடும் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஈமெயில் பயனர்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இருப்பினும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஈமெயிலைக் கண்டுபிடிப்பது இதுவரை கடினமாக இருந்தது. ஆனால் இப்போது UIDAI ஆல் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஆதாருடன் எந்த மொபைல் எண் மற்றும் ஈமெயில் இணைக்கப்பட்டுள்ளது ஆனலைனில் எப்படி சரி பார்ப்பது.
உண்மையில் மக்கள் தங்கள் மொபைல் எண்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பயனர்கள் கண்டுபிடித்து மாற்றலாம். இதன் மூலம் ஆதாரில் இருந்து மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.