திருமணத்திற்க்கு பிறகு ஆதார் கார்டில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி?

Updated on 07-Feb-2023
HIGHLIGHTS

ஆதார் கார்டு என்பது முக்கிய அரசு ஆவணமாகத் திகழ்கிறது.

திருமணமான பெண்களுக்கு ஆதார் கார்டில் அப்பா பெயரை நீக்கி கணவர் பெயரை உள்ளிடுவது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம்.

ஆதார் கார்டு என்பது முக்கிய அரசு ஆவணமாகத் திகழ்கிறது. இதில் அவ்வப்போது நேரில் சென்று தகவல்களை மாற்றுவதும் அப்டேட் செய்வது தற்போதைய பிசியான நேரத்தில் கடினமாகவே இருக்கும். குறிப்பாகத் திருமணமான பெண்களுக்கு ஆதார் கார்டில் அப்பா பெயரை நீக்கி கணவர் பெயரை உள்ளிடுவது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம்.

ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கும் இதர தேவைகளுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. நீண்ட வரிசையில் ஆதார் கார்டில் தகவலை மாற்றுவதற்குப் பதில் வீட்டில் இருந்த படியே திருமணமான பெண்கள் தங்கள் கணவர் பெயரை எளிமையாக சில நிமிடங்களையே அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டில் தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரை அப்டேட் செய்வது எப்படி? முதலில் உங்கள் ஆதார் கார்டுடன் போன் நம்பர் லிங்க் செய்திருக்க வேண்டும். கணவர் பெயரை மாற்றச் சான்றிதழ் ஆகத் திருமண சான்றிதழ் தேவை. இது இரண்டும் இருந்தால் போதும் சில நிமிடத்திலேயே ஆதார் கார்டில் அப்டேட் செய்யலாம்.

ஸ்டெப் 1 : திருமண சான்றிதழை போனில் போட்டோவாகவோ அல்லது ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

ஸ்டெப் 2 : https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தள முகவரிக்குச் செல்லவும். அதில் ஆதார் திருத்தம் என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிடவும்.

ஸ்டெப் 3 : உங்கள் ஆதார் கார்டில் இணைந்துள்ள போன் எண்ணுக்கு OTP எண் வரும். அதனை உள்ளிட்டு உங்களின் திருத்தப் பக்கத்திற்குச் செல்லலாம். 

ஸ்டெப் 4 : அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், வீடு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமோ அந்த தகவல் இடம்பெற்றிருக்கின்ற இடத்தில் பெயர் மாற்றம் என்று கொடுத்து, தந்தை பெயருக்குப் பதில் கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.

ஸ்டெப் 5 : அதற்குச் சான்றாக ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்த திருமண சான்றிதழைப் பதிவேற்றவும். 

ஸ்டெப் 6 : பின்னர் தகவல்களை சரிபார்த்துக் கொண்டு உங்கள் கோரிக்கைக்குக் கட்டணமாக ரூ.50 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஸ்டெப் 7 : அதனைத் தொடர்ந்து, Submit கொடுத்தவுடன் உங்களுக்குப் பதிவு எண் ஒன்று தோன்றும்.அதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அளித்த கோரிக்கை சில நாட்களில் சரிபார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும். திருத்தம் செய்யப்பட்டதற்கான தகவல் உங்களில் போன் நம்பருக்குச் செய்தியாக வரும். உங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்ணை வைத்து கோரிக்கையின் நிலையை ஆதார் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் 90 நாட்களில் திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கார்டு உங்களின் வீட்டு முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த சேவையை ஆதார் கார்டு, திருமண பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களோடு அருகில் உள்ள இ சேவை மையத்திலும் ரூ.50 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :